For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

9 முதல் 3 மணி வரை நடந்த முழு அடைப்பு போராட்டம்.. ஸ்தம்பித்த இந்தியா.. அமைதியாக நிறைவு!

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நாடு முழுவதும் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் நிறைவு- வீடியோ

    சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. எந்த வித அசம்பாவிதமும் இன்று போரட்டம் நிறைவு பெற்றுள்ளது.

    இந்த போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் பல மாநிலங்களில் பேருந்துகள் இயங்கவில்லை.

    இதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்பட்டது.

    மோடி ஆட்சி

    மோடி ஆட்சி

    பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91காசுகளாகும். டீசல் விலை 56 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.98காசுகளாகும். மும்பையில் பெட்ரோல் விலை 89.10 ரூபாய்க்கு விற்கிறது.

    இந்தியா முழுக்க போராட்டம்

    இந்தியா முழுக்க போராட்டம்

    இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தியா முழுக்க முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை போராட்டம் நடந்தது.

    யார் ஆதரவு

    யார் ஆதரவு

    காங்கிரஸ் அழைப்பு விடுத்த இந்த போராட்டத்திற்கு 40க்கும் மேற்பட்ட கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. அதேபோல் இந்தியா முழுக்க பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முக்கியமான இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எல்லாமே ஆதரவு தெரிவித்தது. தமிழகத்தில் திமுகவின் தலைமையில் போராட்டம் நடந்தது.

    கடைகள் இயங்கவில்லை

    கடைகள் இயங்கவில்லை

    இதனால் இன்று இந்தியா முழுக்க போராட்டம் நடந்த மாநிலங்களில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. வணிகர் அமைப்புகள் அனைத்தும் கடைகளை அடைப்பதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.. அதே சமயத்தில் தொழிலாளர்கள் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    பேருந்துகள் இயங்கவில்லை

    பேருந்துகள் இயங்கவில்லை

    அதேபோல் போராட்டத்திற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்கிய மாநிலங்களில் எல்லாம் பேருந்துகள் இயங்கவில்லை. அலுவலகம், அரசு பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் ஆம்புலன்ஸ், மருத்துவமனை இயங்கியது. அதேபோல் போல் பால், மருந்து ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் எந்த வித அசம்பாவிதமும் இன்று போரட்டம் நிறைவு பெற்றுள்ளது.

    English summary
    Bharath Bandh: Opponents joined together to fight the petrol-diesel hike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X