For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபிஎல் போட்டி இடமாற்றம்...தமிழன் அடையாளத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி- பாரதிராஜா

ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது சாதாரண வெற்றியல்ல மிகப்பெரிய வெற்றி என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    அடிபணிந்தது ஐபிஎல் நிர்வாகம்...சென்னை போட்டிகள் இடமாற்றம்- வீடியோ

    சென்னை: தமிழர்களின் போராட்டத்திற்கு பணிந்து ஐபிஎல் போட்டிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண வெற்றியல்ல என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

    சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் ஐபிஎல் போட்டியை நடக்க விடமாட்டோம் என தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. நேற்று அண்ணாசாலையில் நடந்த புரட்சியினால் ஐபிஎல் நிர்வாகம் பணிந்துள்ளது.

    டெல்லியில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் சி.எஸ்.கேவுடன் இதர அணிகள் மோதும் 7 போட்டிகளை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது. ஒரு போட்டி முடிந்துள்ள நிலையில் எஞ்சிய 6 ஐபிஎல் போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    தமிழன் உணர்வுக்கு கிடைத்த வெற்றி

    தமிழன் உணர்வுக்கு கிடைத்த வெற்றி

    தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை தொடங்கிய பாரதிராஜா சென்னையில் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். ஐபிஎல் போட்டிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டது குறித்து கருத்து கூறியுள்ள பாரதிராஜா, இது தமிழ் இன உணர்வு சார்ந்த மொழி சார்ந்த அனைவரும் தமிழன் என்ற ஒரே கூடாரத்திற்கு ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.

    தமிழன் ஜெயிப்பான்

    தமிழன் ஜெயிப்பான்

    தமிழர்களை கேவலமாக நினைத்திருந்தார்கள். எதிர்ப்பை மதிக்காமல் நடத்தினார்கள். எனவேதான் போராட்டம் நடத்தினோம். இது மிகப்பெரிய அறப்போராட்டம். இந்த வெற்றி தொடரும். மீத்தேன் பிரச்சினை தொடங்கி 9 பிரச்சினைகள் இருக்கிறது. அதற்கும் போராடுவோம். தமிழன் ஜெயிப்பான் என்பதற்கான முதல்படி இது.

    தமிழர் அடையாளம்

    தமிழர் அடையாளம்

    தமிழர்கள் அறவழிப் போராளிகள் என்பதை நிரூபித்தோம் என்றும் பாரதிராஜா கூறியுள்ளார். அரசியல் சாராமல் தமிழர் அடையாளத்துடன் போராடியவர்களுக்கு வெற்றி என்றும் பாரதிராஜா கூறியுள்ளார். ஐபிஎல் நிர்வாகத்திற்கும் நன்றி என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

    மோடிக்கு கருப்புக்கொடி

    மோடிக்கு கருப்புக்கொடி

    பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மோடி என்கிற தனி நபர் மீது காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்போ கிடையாது. தமிழன் கலாச்சாரம், பண்பாடு பறிக்கப்படுகிறது. எங்களின் நிலங்களை பறித்து கொள்கின்றனர்.

    மோடி உணரவேண்டும்

    மோடி உணரவேண்டும்

    தமிழன் இனம், மொழி, நிலம் அழிந்து கொண்டிருக்கிறது. அதற்கு மோடி காரணமாக இருக்கிறார் என்ற சந்தேகம் உள்ளது. அதன்காரணமாகவே இந்த கருப்புக்கொடி போராட்டம். சென்னை விமான நிலையத்திற்கு எதிரே நின்று முழக்கமிடுவோம். இந்த போராட்டத்தின் மூலம் மோடி உணரவேண்டும்.

    English summary
    IPL matches have been shifted to the Tamil struggle. Director Bharathiraja said that this was huge success for Tamilians.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X