For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வடமாநில தொழிலாளர்களை கொல்வதாக போலி வீடியோ பரப்பிய பீகார் நபர் கைது! திருப்பூர் போலீஸ் அதிரடி!

தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்து வரும் பீகார் மாநில தொழிலாளர்களை தமிழர்கள் அடித்து கொல்வதாக போலியான வீடியோக்களை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பினர்.

Google Oneindia Tamil News

திருப்பூர்: தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்து வரும் பீகார் மாநில தொழிலாளர்கள் அடித்து கொல்லப்படுவதாக போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பட்டன. இதுதொடர்பாக பீகாரை சேர்ந்த நபரை திருப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் கூலி தொழிலாளர்கள் முதல் சொந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகள் துவங்கி அதிகாரம் கொண்ட பதவிகள் வரை வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.

இதற்கு தமிழ்நாடு விதிவிலக்க. தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களிலும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றன்ர. குறிப்பாக வடமாநிலத்தவர்கள் ஏராளமானவர்கள் தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்து பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விநியோகம்.. வேடசந்தூர் அருகே 10 பேர் கும்பல் கைது! வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விநியோகம்.. வேடசந்தூர் அருகே 10 பேர் கும்பல் கைது!

 வடமாநில தொழிலாளர்கள்

வடமாநில தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் கட்டடம், பாலம் கட்டும் பணி, தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகளில் வடமாநில தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். மேலும் குல்பி ஐஸ், பஞ்சுமிட்டாய் விற்பனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டின் பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை பிழைப்பு தேடி வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

 பீகாரில் எதிரொலித்த பிரச்சனை

பீகாரில் எதிரொலித்த பிரச்சனை

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத்தவர்கள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அடித்து கொலை செய்யப்படுவதாகவும் போலியாக வீடியோக்களை சிலர் பரப்பினர். குறிப்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்திகளை பரப்பினர். இது பீகாரில் பெரிய பிரச்சனையாக வெடித்தது. பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்த கூறினார். இதையடுத்து பீகார் அரசு சார்பில் அதிகாரிகள் குழு தமிழ்நாடு வந்து அம்மாநில தொழிலாளர்களை சந்தித்து நிலைமை பற்றி கேட்டறிந்தனர்.

 அதிகாரிகள் குழு வருகை

அதிகாரிகள் குழு வருகை

அப்போது தமிழ்நாட்டில் அப்போது அவர்கள் நலமாக உள்ளதாகவும், எந்த அச்சுறுத்தலும், தாக்குதலும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் குழு தமிழ்நாட்டில் இருந்து பீகார் சென்றனர். மேலும் வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு, போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்கள் எச்சரித்து இருந்தனர்.

 அதிரடி காட்டும் போலீஸ்

அதிரடி காட்டும் போலீஸ்

மேலும் வதந்தி பரப்பியோர் மீது வழக்குப்பதிவு செய்து தமிழ்நாடு மற்றும் பீகார் மாநில போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக பீகார் மாநில யூடியூபர் மணிஷ் காஷ்யப் உள்பட மேலும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 திருப்பூர் போலீசார் அதிரடி

திருப்பூர் போலீசார் அதிரடி

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்த உபேந்திர ஷானி என்பவர் திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.பீகாரின் ரத்வாரா பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை திருப்பூர் அழைத்து வந்த தனிப்படை போலீசார் சிறையில் அடைத்தனர்.

English summary
Fake videos about Bihar state laborers who staying and working in Tamil Nadu being beaten to death were circulated on social media. In this connection, the Tirupur police arrested a person from Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X