For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி பாஸ்போர்ட்- மலேசியா செல்ல முயன்ற பிலால் மாலிக்கின் சகோதரர் திருச்சி ஏர்போர்ட்டில் கைது

By Siva
Google Oneindia Tamil News

Bilal Malik
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் தீவிரவாதி பிலால் மாலிக்கின் சகோதரர் போலி பாஸ்போர்ட் மூலம் கோலாலம்பூர் செல்ல முயற்சி செய்தபோது போலீசில் சிக்கினார்.

மதுரை முனிச்சாலை ரோடு 4வது தெருவைச் சேர்ந்த சையது என்பவரின் மகன் மைதீன் மதார்(43). அவர் நேற்று மாலை ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லவிருந்தார். இதற்காக திருச்சி விமான நிலையம் வந்த மதாரின் பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த காதர்தீன் என்ற முகவரி இருந்தது.

இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கடந்த அக்டோபர் மாதம் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி பிலால் மாலிக்கின் சகோதரர் என்பது தெரிய வந்தது.

மதார் கடந்த 2011ம் ஆண்டுக்கு முன்னர் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு இந்தியாவுக்கு திரும்பிய அவர் இங்கேயே சில ஆண்டுகள் தங்கிவிட்டார். இந்நிலையில் கோலாலம்பூரில் ஹோட்டல் வேலைக்காக கிளம்பிய போது போலீசில் சிக்கியுள்ளார்.

English summary
Extremist Bilal Malik's brother Maideen Mathar has been arrested in Trichy airport while he was trying to go to Kualalumpur through fake passport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X