மாஜி அமைச்சர், எம்.பி.யுடன் குமரி மாவட்டத்தில் களமிறங்கிய திமுக- வேட்பாளர்கள் பயோடேட்டா
சுரேஷ்ராஜன்
நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளராக சுரேஷ்ராஜன் (வயது 54) அறிவிக்கப்பட்டுள்ளார். 1996-ல் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்று சுற்றுலாத்துறை அமைச்சரானார். 2001-ல் கன்னியாகுமரியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய போதும் 2006-ல் மீண்டும் வென்றார். அப்போது திமுக அரசில் சுற்றுலா மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரானார். 2011- தேர்தலில் மீண்டும் தோல்வியைத் தழுவினார். 2004-ம் ஆண்டு முதல் திமுகவின் கன்னியாகுமரி மாவட்ட செயலராக இருந்து வருகிறார்.
ஆஸ்டின்
கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளராக ஆஸ்டின் (வயது 58) நிறுத்தப்பட்டுள்ளார். 1992-ல் அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர். 2001-ல் நாகர்கோவில் தொகுதியில் எம்.ஜி.ஆர். அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ.வானார். பின்னர் தேமுதிகவில் மாநில பொறுப்பு வகித்தார். இதனைத் தொடர்ந்து திமுகவுக்கு மாவியவர். தற்போது திமுக மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவராக உள்ளார்.
மனோதங்கராஜ்
பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளராக மனோதங்கராஜ் (வயது 48) நிறுத்தப்பட்டுள்ளார். திமுகவின் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலராக இருக்கிறார்.