For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை, தூத்துக்குடியில் அடுத்த மாதம் பறவைகள் கணக்கெடுக்கப்படும் எனத் தகவல்

நெல்லை, தூத்துகுடியில் பறவைகள் கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்காக இரு மாவட்டங்களிலும் 40 குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மாதம் பறவைகங்ள கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் நிலவும் வறட்சியால் பறவைகள் எண்ணிக்கை குறையும் என பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜிவநதியான தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகளான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் நெல் களஞ்சியமாகவும், ஆயிரக்கணக்கான பறவைகளின் புகலிடமாகவும் விளங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் தூத்துக்குடி நீர் நிலைகளில் சுமார் 90 வகையான நீர் பறவைகள் கண்டறியப்பட்டன.

Bird survey will be held next month in Tirunelveli and Tuticorin district

இவைகளில் பெரும்பாலானவை அயல்நாடுகளில் இருந்து வருபவை. நெல்லை மாவட்டத்தில் உள்ள கூத்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் மிகுதியாக பறவைகள் கூடுவது வழக்கம். கடந்த ஒராண்டாக நெல்லை மாவட்டத்தில் வறட்சி, நீர்நிலைகள் ஆக்கரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பறவைகள் இன்னல்களை சந்தித்து வருகின்றன.

மணிமுத்தாறில் உள்ள அகத்தி.யமலை சமுதாயம் சார்ந்த இயற்கை வன பாதுகாப்பு மையம், தூத்துக்குடி முத்து நகர் இயற்கை சங்கம், நெல்லை இயற்கை சங்கம ஆகியவை இணைந்து அடுத்த மாதம் கணக்கெடுப்பு நடத்த உள்ளன.

நெல்லை, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்புக்காக மொத்தம் 40 பெரிய குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் வறட்சி காரணமாக இந்தாண்டு பறவைகள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

English summary
Bird survey will be conducted next month in Tirunelveli and Tuticorin district. activists says drought across the state the birds number may reduce this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X