For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 தொகுதிகளில் அதிமுக- திமுகவுடன் நேரடியாக மோதும் பாரதிய ஜனதா

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக 6 தொகுதிகளில் அதிமுக, திமுகவுடன் நேரடியாக மோதுகின்றன.

பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, மதிமுக, பாமக ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் பாஜக 8 தொகுதிகளில் போட்டியிடுக்கின்றன. 8 தொகுதிகளில் 6-க்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். தஞ்சாவூர் மற்றும் வேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

எஞ்சிய 6 தொகுதிகளிலுமே அதிமுக- திமுகவுடன் நேரடியாக மோதுகிறது பாரதிய ஜனதா.

தென் சென்னை

தென் சென்னை

தென் சென்னையில் அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் டி. ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனமும் திமுக சார்பில் வடசென்னை சிட்டிங் எம்.பி டி.கே.எஸ் இளங்கோவனும் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் பாஜக பெருந்தலையான இல.கணேசனும் போட்டியிடுகின்றார்.

நீலகிரி

நீலகிரி

நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் கோபாலகிருஷ்ணனும் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி. ஆ. ராசாவும் களம் காணுகின்றனர். இவர்களுடன் பாஜகவின் குருமூர்த்தி போட்டியிடுகிறார்.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் தொகுதியில் அதிமுகவின் நாகராஜன், திமுகவின் கணேஷ்குமார் ஆகியோருடன் பாஜகவின் சி.பி. ராதாகிருஷ்ணன் மோதுகின்றார். பாஜக எளிதில் வெல்லக் கூடிய தொகுதி என்று கணிக்கப்பட்டாலும் சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்ததற்கு ஏகத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் பாஜகவினர் கவலை கொண்டுள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை

இங்கு அதிமுகவின் செந்தில்நாதனும் திமுகவின் சுப துரைராஜும் மோத பாஜக சார்பில் ஹெச். ராஜாவும் களம் இறங்குகின்றனர். அதே போல் காங்கிரஸின் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் களமிறங்குவதால் இத்தொகுதி முக்கியத்துவமானதாக இருக்கிறது.

ராமநாதபுரம்..

ராமநாதபுரம்..

இத்தொகுதியில் அதிமுகவில் முன்னாள் தமிழக அமைச்சர் அன்வர்ராஜா, திமுக சார்பில் கல்வியாளர் முகமது ஜலீல் ஆகியோர் களமிறங்க பெரிதாக அறிமுகம் இல்லாத குப்புராமு என்பவரை பாஜக களமிறக்கியுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுகவின் ஜான் தங்கம், திமுகவின் ராஜரத்தினம் களமிறங்க பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். அத்துடன் கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர் சுப. உதயகுமார், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுவதால் இத்தொகுதி தேசிய முக்கியத்துவம் பெறுகிறது.

English summary
BJP alone clash with ADMK and DMK in 6 seats including South Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X