For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேல் யாத்திரை.. இது உங்க கடமை.. அதிமுகவுக்கு பாஜக வைத்த கோரிக்கை! சிபி ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: பாஜக அதிமுக கூட்டணியில் உள்ளது கூட்டணியில் உள்ள ஒரு கட்சி ஒரு முடிவு எடுக்கும்போது அதனை கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சி முழுமையாக ஆதரிக்க வேண்டும்-அது கூட்டணி கட்சிகளின் கடமையாகும். எனவே தமிழக அரசு யாத்திரைக்கு தடை விதித்தாலும் தொடர்ந்து வேல் யாத்திரை நடைபெறும் என்று பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Recommended Video

    தமிழக அரசு தடை விதித்தாலும் தடையை மீறி தொடர்ந்து வேல் யாத்திரை நடைபெறும்.. சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி

    எந்த மதத்தையும் புண்படுத்தாமல் தமிழ் கடவுளான முருகனின் கலாச்சாரத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெற்றிவேல் யாத்திரையை பாஜக மேற்கொண்டு வருவதாகவும், இதனை தமிழக அரசு தடுக்க நினைப்பது வேதனையாக உள்ளது என்றும் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    திருப்பத்தூரில் அரசின் தடையை மீறி பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் மற்றும் கார்த்திகாயினி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வெற்றிவேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

    சிபி ராதாகிருஷ்ணன் கைது

    சிபி ராதாகிருஷ்ணன் கைது

    இந்த பேரணியில் 200 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர் . யாத்திரையின் இறுதியில் ராதாகிருஷ்ணன் ராகவன் மற்றும் கார்த்திகாயினி மற்றும் கட்சி நிர்வாகிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

    அப்போது பரவவில்லையே

    அப்போது பரவவில்லையே

    முன்னதாக கைது செய்த போது செய்தியாளர்களிடம் பேசிய,
    ராதாகிருஷ்ணன் தமிழரின் கலாச்சாரத்தை பரப்புவதற்காக தான் வேலி யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செல்லும்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்பொழுதெல்லாம் பரவாத கொரானா வைரஸ் வேல் யாத்திரை நடக்கும்போது பரவும் என்று கூறுவது வேதனையாக உள்ளது.

    தடை விதித்தாலும் தொடரும்

    தடை விதித்தாலும் தொடரும்

    பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கிறது. கூட்டணியில் உள்ள ஒரு கட்சி ஒரு முடிவு எடுக்கும்போது அதனை கூட்டணியில் உள்ள கட்சி முழுமையாக ஆதரிக்க வேண்டும் அது கூட்டணி கட்சிகளின் கடமையாகும். எனவே தமிழக அரசு யாத்திரைக்கு தடை விதித்தாலும் தடையை மீறி தொடர்ந்து வேல் யாத்திரை நடைபெறும்.

    அதிமுககூட கண்டிக்கவில்லை

    அதிமுககூட கண்டிக்கவில்லை

    தற்போது வேல் யாத்திரை செய்வதன் மூலம் பாஜகவினர் கைது செய்யப்படுவதால் தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது. கந்த சஷ்டி கவசத்தை சிலர் அவதூறாக பேசினார்கள் அதனை கண்டிக்க திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ,மதிமுக, காங்கிரஸ் ,எந்த கட்சியையும் முன்வரவில்லை அதிமுக கட்சி கூட அதனை கண்டிக்கவில்லை. இருந்தபோதிலும் அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசியவர்கள் அமைதியாக உள்ளனர்.

    திமுகவை பாதிக்கும்

    திமுகவை பாதிக்கும்

    மனுஸ்மிருதி என்று இல்லாத ஒன்றை விடுதலை சிறுத்தை கட்சி பெரிது படுத்தியது. இது அந்த கூட்டணியில் உள்ள திமுகவைத்தான் பாதிக்கும் . இதனால் வரும் தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்திக்கும்" என்று சிபி ராதாகிருஷ்ணன் கூறினார்.

    English summary
    BJP senior leader CP Radhakrishnan has said that the VeriVel yatra will continue despite the Tamil Nadu government's ban on the pilgrimage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X