For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோஷம் எழுப்பினால் கைது... கேள்வி கேட்டால் அடி.. திரும்பத் திரும்ப பேசினால் தீவிரவாதி.. வாவ்!

Google Oneindia Tamil News

சென்னை: கோஷம் எழுப்பினால் கைது செய்கிறார்கள், கேள்வி கேட்டால் அடிக்கிறார்கள், திரும்பத் திரும்ப பேசினால் தமிழ் தீவிரவாதி அல்லது அர்பன் நக்சல் என்கிறார்கள். பாஜக மீதான பிம்பமாக இது மக்கள் மனதில் பதிய ஆரம்பித்து விட்டது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அடையாளம் உள்ளது. ஏதாவது ஒரு வகையில் தனது இருப்பை அது காட்டிக் கொண்டு வருகிறது. ஆனால் பாஜகவுக்கு அப்படி எதுவும் இல்லை. அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி தானும் நிலைத்து நிற்க அது கடுமையாக முயன்று வருகிறது.

ஆனால் அதற்காக அக்கட்சியினர் செய்யும் செயல்கள் எல்லாமே சர்ச்சையாகி விடுகிறது. சர்ச்சைகள் மட்டும்தான் பாஜகவா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுகிறது.

 துப்பாக்கிச் சூட்டில்

துப்பாக்கிச் சூட்டில்

தூத்துக்குடி விமானத்தில் தமிழிசைக்கும் - மாணவி சோபியாவுக்கும் இடையிலான மோதல் அரசியலாக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழிசை காட்டிய பிடிவாதம் பெரும் விவாதங்களை எழுப்பியது.

 விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று சைதாப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஒரு கூத்து நடந்துவிட்டது. இதிலும் தமிழிசை நடு நாயகமாக நின்றார்.

சிரித்தார்

சிரித்தார்

செய்தியாளர்கள் சந்திப்பின்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவரை பாஜகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். வெளியே கொண்டு போய் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தமிழிசை தடுக்கவில்லை. மாறாக சிரித்தபடி நின்றிருந்தார்.

 சமூகவிரோதிகள்

சமூகவிரோதிகள்

மறுபக்கம் எச். ராஜா விவகாரம். முதலில் காவல்துறை. ஹைகோர்ட்டை அசிங்கப்படுத்திப் பேசினார். நேற்று வேடசந்தூரில் மெரீனா, ஸ்டெர்லைட் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என்று வர்ணித்தார்.

 சிம்பிள் விளக்கம்

சிம்பிள் விளக்கம்

இன்னொரு பக்கம் எஸ்வி.சேகர் பெண் ஊழியர்களை விபச்சாரிகள் போல சித்தரித்து டிவீட் போட்டு விட்டு ஜாலியாக உலா வருகிறார். ஆக, பாஜகவினர் எது செய்தாலும் அது அமைதியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதேசமயம், மற்றவர்கள் கோஷமிட்டால் கைது, கேள்வி கேட்டால் அடி உதை, திரும்ப திரும்ப பேசினால் தீவிரவாதிகள் என்று கூறுவது பச்சை பாரபட்சமான செயலாக மக்களால் பார்க்கப்படுகிறது.

தாமரை மலர வேண்டும் என்றால் முதலில் தலைவர்களிடையே மன வளர்ச்சி வளர வேண்டும்.. பிறகு எல்லாமே தானாக நடக்கும் என்பது மக்களின் கருத்து.

English summary
BJP in crisis after the controversial speeches of its leaders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X