For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

180 நமக்கு, 54 கூட்டணி கட்சிகளுக்கு: இது பாஜக போட்டுள்ள கணக்கு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 180ல் போட்டியிடுவது என்றும் மீதமுள்ள 54 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது என்றும் பாஜக முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பெரு முயற்சி செய்தும் பலனில்லை. இந்நிலையில் தேர்தலை தனியாக சந்திக்கும் அளவுக்கு கட்சி பலமாக இருப்பதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

BJP decides to contest in 180 constituencies in TN

தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 180ல் போட்டியிடுவது என்றும் மீதமுள்ள 54 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது என்றும் பாஜக முடிவு செய்துள்ளது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் இந்திய ஜனநாயக கட்சி 40 தொகுதிகளும், புதிய நீதிக்கட்சி 25ம், தேவநாதனின் கல்வி கழகம் 40ம், தேவர் அமைப்புகள் 30ம், அனைத்து இந்திய முஸ்லீம் முன்னேற்ற கழகம் 20 தொகுதிகளும் தங்களுக்கு ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

அவர்களுக்கு எல்லாம் எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை சென்னையில் உள்ள கமலாலயத்தில் நடந்தது.

மத்திய அமைச்சர் ஜவடேகர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பார்வையாளர் முரளிதரராவ், தமிழிசை சவுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, துணை தலைவர் வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மோகன் ராஜுலு உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.

இன்னும் 2 நாட்களில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
BJP has decided to contest in 180 places and to allot 54 constituencies to allies in the forthcoming TN assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X