தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க நாங்கள் விரும்பவில்லை - பொன்.ராதா ஓபன் டாக்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க பாஜக விரும்பவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

வேலூரில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட பின் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்போது உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு துணிச்சல் இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால், காமராஜர், அண்ணா, எம்ஜியார், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு இருந்தது போலான துணிச்சலை எதிர்பார்க்கின்றோம்.

 Bjp do not want to impose article 356 in Tamilnadu said Pon.Radha krishnan

மு.க.ஸ்டாலின் 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்ற பழமொழியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். திமுக முன்னில் இருந்ததைவிட இப்போது தேய்ந்துகொண்டுதான் வருகிறது. தர்போது இருக்கும் சூழ்நிலையில் திமுகவில் யாரும் புதிதாகப் போய்ச் சேரவில்லை. திமுக சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

திமுக சரிவை சந்தித்துக்கொண்டிருக்கும் சூழலில் ஆட்சியப் பிடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இப்போதிருக்கும் ஆட்சி நீடித்தால், திமுக இல்லாமல் போகும் வாய்ப்பு உருவாகும் என திமுகவினர் நினைக்கிறார்கள். அதனால் அதிமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால், மத்திய அரசு, தமிழகத்தில் ஆளும் அரசு இன்னும் திறமையோடு செயல்பட வேண்டும் என நினைக்கிறது. வேகமாகச் செயல்பட வேண்டும் என நினைக்கிறது. பாஜக இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய விரும்பவில்லை என்றார் பொன்.ராதா கிருஷ்ணன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bjp do not want to impose article 356 in Tamilnadu and Edappadi Palanisamy government should be fast said Pon. Radhakrishnan.
Please Wait while comments are loading...