For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக கூட்டணித் தலைவர்களில் 3 காலேஜ் ஓனர்கள், 2 கல்யாண மண்டப ஓனர்கள், 3 'முர்டோச்'கள்!!

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக கூட்டணியைப் பற்றி ஆர் அன்ட் டி செய்தால் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்க முடியும்.

அரசியலைத் தாண்டி இந்தத் தலைவர்களில் பலர் பல துறைகளில் படு பிசியாக இருப்பவர்கள் ஆவர்.

குறிப்பாக மீடியா, கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் என பிசினஸிலும் பிசியாக இருக்கிறார்கள் இவர்கள்.

சுத்தமான அரசியல்வாதிகள் என்று பார்த்தால் பாஜக தலைவர்களை மட்டுமே சொல்லலாம். மற்ற அனைவருமே பல விதமான வியாபாரத்திலும் ஈடுபட்டிருப்பவர்களாகவே உள்ளனர்.

கல்வித் தந்தைகள்!

கல்வித் தந்தைகள்!

இந்த தலைவர்களில் டாக்டர் ராமதாஸ், பாரிவேந்தர், விஜயகாந்த் ஆகியோர் கல்வித் துறையிலும் கால் பரப்பி நிற்கின்றனர்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

இவர்களில் விஜயகாந்த் கல்வித்துறைக்குள் தலையை விட்ட முக்கியஸ்தர்களில் ஒருவர். அவர் சென்னை அருகே மாமண்டூரில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி என்ற கல்லூரியை வைத்து நடத்தி வருகிறார். ரொம்ப காலமாக.

எஸ்ஆர்எம் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர்

எஸ்ஆர்எம் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர்

அடுத்து பாரிவேந்தர். இந்திய ஜனநாயகக் கட்சி என்ற ஒன்றை சமீபத்தில் தோற்றுவித்த இவர் நீண்ட காலமாக கல்வித்துறையில் இருந்து வருபவர். எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் தலைவர். கல்வித்துறையில் இவரது பெயர் பச்சமுத்து.

ராமதாஸும் கல்வித்தந்தைதான்...!

ராமதாஸும் கல்வித்தந்தைதான்...!

டாக்டர் ராமதாஸும் கூட ஒரு கல்வித்தந்தைதான். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் வன்னியர் அறக்கட்டளையின் சார்பில் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை நடத்தி வருகிறார். சரஸ்வதி என்பது டாக்டர் ராமதாஸின் மனைவி பெயராகும்.

ஏசிஎஸ்ஸும் இருந்திருந்தால்

ஏசிஎஸ்ஸும் இருந்திருந்தால்

இந்தக் கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தையும் சேர்த்து சீட் கொடுத்திருந்தால், நான்கு கல்வித் தந்தைகளாக எண்ணிக்கை கூடியிருக்கும்.

அடுத்து கல்யாண மண்டப ஓனர்கள்

அடுத்து கல்யாண மண்டப ஓனர்கள்

அடுத்து கல்யாண மண்டப ஓனர்கள். அவர்கள் யார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒருவர் விஜயகாந்த். இன்னொருவர் அவரது மச்சான் சுதீஷ்.

விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம்

விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம்

தற்போது விஜயகாந்த்தின் கட்சித் தலைமையமாக இது செயல்படுகிறது. அதற்கு முன்பு இது திருமண மண்டபமாக பிரமாண்டமாக இருந்தது. பாலம் கட்டுவதற்காக இதில் பாதியை காலி செய்து விட்டார்கள் கடந்த திமுக ஆட்சியின்போது.

மச்சான் சுதீஷுக்கும் ஒரு மண்டபம்

மச்சான் சுதீஷுக்கும் ஒரு மண்டபம்

அதே போல சுதீஷும் கூட ஒரு பிரமாண்டமான கல்யாண மண்டபத்தை வைத்துள்ளார். அதன் பெயர் எல்கேஎஸ் கல்யாண மண்டபம். பொன்னேரியில் உள்ளது.

தமிழகத்தின் முர்டோச்கள்

தமிழகத்தின் முர்டோச்கள்

தமிழகத்தின் முர்டோச்கள் என்று இவர்களை தாராளமாக கூப்பிடலாம். விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், பாரிவேந்தர். மூவருமே மீடியாவிலும் கால் பதித்துள்ளனர்.

விஜயகாந்த்தின் கேப்டன் டிவி

விஜயகாந்த்தின் கேப்டன் டிவி

விஜயகாந்த் கேப்டன் டிவியை வைத்துள்ளார். செய்தி சேனலும் வைத்துள்ளார்.

டாக்டர் ராமதாஸின் மக்கள் டிவி

டாக்டர் ராமதாஸின் மக்கள் டிவி

அதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மக்கள் டிவி வைத்துள்ளார். பத்திரிக்கையும் வைத்துள்ளார்.

பாரிவேந்தர் தான் பெரியவர்

பாரிவேந்தர் தான் பெரியவர்

இவர்களில் பாரிவேந்தர்தான் பெரிய முர்டோச். இவரிடம் டிவி சேனல்கள், பத்திரிக்கை என நிறையவே உள்ளது.

சினிமாக்காரர்கள்

சினிமாக்காரர்கள்

இந்தத் தலைவர்களில் சினிமாவுடனும் சிலர் தொடர்பு கொண்டவர்கள். விஜயகாந்த் பற்றிச் சொல்ல வேண்டாம். அவரது மச்சான் சுதீஷ் ஒரு தயாரிப்பாளர், விநியோகஸ்தர். பாரிவேந்தரும் விநியோகஸ்தராக இருக்கிறார். தலைவா படத்தை விநியோகத்திற்கு எடுத்து இவர் பட்ட பாடு அனைவரும் அறிந்ததே.

English summary
BJP alliance in Tamil Nadu has a mixed bag of leaders, some of them are owning marriage halls, some have educational institutions and some have TV channels, news papers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X