For Daily Alerts
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில்... மோடி சிடி...

மோடியின் ஆரம்ப கால வாழ்க்கை, அவர் கட்சியிலும், மக்கள் மத்தியிலும் உயர்ந்த விதம், அவரது சாதனைகள், குஜராத் மாநிலத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகள், 2002 ம் வருடம் நடைபெற்ற குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் உள்ளிட்டவை குறித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் ஒரு பிரசார சிடி தயாரித்துள்ளனர்.
ஆனால் இந்த சிடிக்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தையும் இதுதொடர்பாக அணுக அவர்கள் திட்டமிட்டுள்ளனராம். இருப்பினும் சிடியை விரைவில் வெளிக் கொண்டு வர பாஜக திட்டமிட்டு வருகிறதாம்.