For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தான் ஏழைகள் முன்னேறவில்லை: ஜி.ஆர் குற்றச்சாட்டு- வீடியோ

மத்தியில் ஆளும் பாஜகவின் தவறான பொருளாதரக் கொள்கையால் இரண்டு ஆண்டுகளில் மேல்தட்டு மக்களின் செல்வம் பெருகியுள்ளது. ஆனால் ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இரண்டு ஆண்டுகளில் மேல்தட்டு மக்களின் செல்வம் பெருகியுள்ளது. ஆனால் ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ''நாடு முவுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 25,000 விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால் மேல்தட்டு மக்கலின் பொருளாதரம், செல்வம் பெருகியுள்ளது. ஏழைகள் ஏழைளாகவே உள்ளனர். இது பாரதிய ஜனதா கட்சியின் தவறான பொருளாதரக் கொள்கையால் உருவானது.

 BJP governments wrong economic policies make poor people more poor said G.R

மேலும் தமிழகத்தில் 600 விவசாயிகள் வறட்சியின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டும் தற்கொலை செய்துகொண்டும் இறந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு விவசாயிகள் வறட்சியால் இறக்கவில்லை. உடல்நலக் குறைவு, குடும்ப பிரச்சனையால் தான் இறந்தார்கள் என தவறான பிரமாண வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசும் வற்ட்சியால் பதிக்கப்பட்டவர்களுக்கு சொற்ப அளவே நிவாரணம் கொடுத்து வஞ்சிக்கிறது'' என கூறினார்.

ஐநா சபையின் அறிக்கை ஒன்று உலகமயமதலும் தொழில்மயமமும் தனியார் மயமும் இந்தியாவில் கடந்த 25 ஆண்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள இடைவெளி அதிபயங்கரமாக அதிகரித்துள்ளது என கூறியுள்ளது. ஆனால்,இந்தியாவில் அதுகுறித்து விவாதம் எழுப்பப்படவில்லை.

அதேபோல் பிரதமர் மோடி கொண்டு வந்ய்த பணமதிப்பிழப்பு அறிவிப்பால் பல்வேறு தொழில்கள் நசிந்துள்ளன. ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐநா அறிக்கை கூறியுள்ளது. அதற்கு இதுவரை யாரும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP governments wrong economic policies make poor people more poor and rich people more rich said G.Ramakrishan, Marxist communist secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X