For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக நிலைமை நினைப்பதை விட படு மோசமாத்தான் இருக்கும் போல!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக நிலைமை படு மோசமாத்தான் இருக்கும் போல!- வீடியோ

    சென்னை: ஆர்.கே.நகரில் பாஜகவின் நிலை வெளியில் சொல்வதை விட படு மோசமாகத்தான் இருக்கும் போல தெரிகிறது. இதுவரை வந்துள்ள கருத்துக் கணிப்புகள் இதைத்தான் நிரூபிப்பதாக உள்ளது.

    இதுவரை வந்த கருத்துக் கணிப்புகளைக் கூட புறக்கணித்தாலும் கூட பேராசிரியர் ராஜநாயகத்தின் கருத்துக் கணிப்பை புறம் தள்ளி விட முடியாது. காரணம், இவரது குழுவினர் பெரும்பாலும் சரியான கணிப்புகளையே வெளியிடுவது வழக்கம். இப்போது வந்துள்ள ஆர்.கே.நகர் குறித்த கருத்துக் கணிப்பும் கூட அட இவ்வளவுதானா உங்க லட்சணம் என்று பாஜகவைப் பார்த்து கேட்க வைப்பதாக உள்ளது.

    வெளியிலும், டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இன்ன பிற தளங்களிலும் பாஜகவினரும், அவர்களது ஆதரவாளர்களும் போட்டு வரும் கோஷத்துக்கும் உள்ளே உள்ள கள நிலவரத்துக்கும் சற்றும் சம்பந்தமே இல்லை.

    படு கேவலம்

    படு கேவலம்

    உண்மையில் ஆர்.கே.நகரில் பாஜகவின் நிலைமை படு கேவலமாகத்தான் உள்ளது. 3வது இடம் இல்லை, 4வது இடமும் இல்லை, 5வது இடம் என்ற நிலையில் பாஜக உள்ளது அதிர வைப்பதாக உள்ளது - நம்மை அல்ல பாஜகவினரை.

    தாமரைக்கு 5

    தாமரைக்கு 5

    சின்ன வரிசையில் பார்த்தால் தாமரை சின்னத்திற்கு மக்கள் மனதில் 5வது இடம்தான் கிடைத்துள்ளது. அதாவது டெபாசிட்டைக் கூட பெற முடியாத தூரத்தில் நிற்கிறது தாமரை.

    பரிதாப வேட்பாளர்

    பரிதாப வேட்பாளர்

    வேட்பாளரின் நிலையும் அதேதான். வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் வரிசையிலும் பாஜகவின் கரு நாகராஜனுக்கு 5வது இடமே கிடைத்துள்ளது. முதலிடத்தில் தினகரன், 2வது இடத்தில் மருதுகணேஷ், 3வது இடத்தில் அதிமுகவின் மதுசூதனன், 4வது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் உள்ளனர்.

    எல்லாவற்றிலும் கடைசி இடமே

    எல்லாவற்றிலும் கடைசி இடமே

    அறிவாற்றல், துணிச்சல், நிர்வாகத் திறன், துடிப்பான செயல்பாடு, ஊடகச் சந்திப்பு, வெகுஜன உறவு, சமூக அக்கறை என எல்லாவற்றிலுமே பாஜக வேட்பாளர் கடைசி இடம், அனைத்திலும் பெயிலாகியுள்ளார். சமூக அக்கறையில் மட்டும் அவர் ஜஸ்ட் பாஸ் அதாவது 35 சதவீதம்.

    நாம் தமிழர் அசத்துதே

    நாம் தமிழர் அசத்துதே

    பெரிய கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் நாம் தமிழர் கட்சி அசத்துகிறது. மேற்சொன்ன வகைகளில் இக்கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் எல்லாவற்றிலும் 50 சதவீதத்திற்கும் மேலான ஆதரவை மக்களிடம் பெற்றுள்ளார். ஊடகச் சந்திப்பு மட்டும்தான் 43 சதவீதம்.

    பேசாமல் இருப்பது உத்தமம்

    பேசாமல் இருப்பது உத்தமம்

    பாஜக நிலைமையைப் பார்க்கும்போது அவர்கள் பேசாமல் தேர்தலை விட்டு ஒதுங்கி விடுவதே சாலச் சிறந்தது. மக்களிடம் அவர்களுக்கு எந்த நல்ல பெயரும் இருப்பதாகவே தெரியவில்லை.

    ரொம்பப் பரிதாபம்தான்..!

    English summary
    According to the survey results of the Team Rajanayagam, the BJP is in big problem in RK Nagar it seems.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X