For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக பக்கம் நகரும் பாஜக.. அவசரப்பட்டு திமுகவை திட்டிய பிரேமலதா.. விழி பிதுங்கும் விஜயகாந்த்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பக்கம் பாஜக போய்விட்டால் தேமுதிக மக்கள் நல கூட்டணி பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாகவும், திமுக பக்கம், விஜயகாந்த் கட்சி செல்லாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய அரசியல் சூழ்நிலையில், அதிக கிராக்கி உள்ள கட்சியாக தேமுதிக உள்ளது. திமுக, பாஜக, மக்கள் நல கூட்டணி என மூன்று தரப்பு, இக்கட்சியை இழுக்க முயன்று வருகிறது.

வரும் 20ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டில் கூட்டணி பற்றி விஜயகாந்த் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேமலதா போட்ட குண்டு

பிரேமலதா போட்ட குண்டு

இந்நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, செய்தியாளர்களை சந்தித்தபோது அளித்த பேட்டி, திமுகவை திக்குமுக்காட செய்துவிட்டது. திமுக, காங்கிரஸ் இரண்டுமே ஊழலில் திளைத்த கட்சிகள்., அவை கூட்டணி வைத்துள்ளது ஏன் என்று தெரியவில்லை என பிரேமலதா சாடினார்.

இரு வாய்ப்பு

இரு வாய்ப்பு

பிரேமலதா பேச்சை வைத்து பார்க்கும்போது, தேமுதிக இனிமேல் திமுக பக்கம் போகாது என்றே தெரிகிறது. அவர்களுக்கு எஞ்சியுள்ள வாய்ப்பு, பாஜக மற்றும் மக்கள் நல கூட்டணி இரண்டும்தான்.

பாஜக பக்கம்

பாஜக பக்கம்

இதில் பாஜக பக்கம் விஜயகாந்த் சரிய அதிக வாய்ப்புள்ளது. மத்தியில் ஆளும் கட்சி என்பதாலும், அவ்வப்போது அக்கட்சி தலைவர்கள் விஜயகாந்த்தை சந்தித்து பேசிவருவதாலும், இதற்கான வாய்ப்பு அதிகம். சமீபத்தில் நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் ஜவடேக்கரிடமும், விஜயகாந்த் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் பாஜக கூட்டணியில் சேர தயார் என்று நிபந்தனை விதித்துள்ளாராம்.

அம்மா பக்கம்

அம்மா பக்கம்

அதேநேரம், பாஜகவோ, 25 சீட்டுகளுக்கு மேல் கொடுத்தால் அதிமுக பக்கம் போய்விடுவது என்ற உறுதியிலுள்ளது. ஹெச்.ராஜா, இல.கணேசன் போன்ற பல முக்கிய தலைவர்கள், பாஜக-அதிமுக கூட்டணியை விரும்புகிறார்களாம்.

வெற்றி கனவு

வெற்றி கனவு

அதிமுக கூட்டணியில் 25 சீட்டுகளுக்கு மேல் பெற்றுவிட்டால், எப்படியும், அதில் பாதி தொகுதிகளையாவது வென்றுவிடலாம். தமிழக சட்டசபைக்குள் பாஜக கம்பீரமாக நடைபோடலாம் என்று நினைக்கிறது.

இறங்குவாரா ஜெயலலிதா

இறங்குவாரா ஜெயலலிதா

அதிமுக சீட்டுகளை குறைத்தால், விஜயகாந்த்துடன் இணைந்து செயல்பட பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், மத்தியிலுள்ள பாஜக தயவு பல விஷயங்களுக்கு தேவைப்படுவதாலும், சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் பாஜக பலம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுவதாலும், அக்கட்சியோடு, கூட்டணி வைக்க ஜெயலலிதா சற்று இறங்கி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நல கூட்டணி

மக்கள் நல கூட்டணி

பாஜக-அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டால், தேமுதிக, மக்கள் நல கூட்டணி பக்கம் போகும் வாய்ப்பு அதிகரிக்கும். அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்து விஜயகாந்த்துக்கு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

பாமக நிலை

பாமக நிலை

அதேநேரம் பாஜக அதிமுக பக்கம் போய்விட்டால், அக்கட்சியோடு கூட்டணி வைக்கும் முடிவிலுள்ள பாமக தனித்து போட்டியிடுவதுதான் ஒரே வழியாக மாறும். ஒருவேளை பாஜக-விஜயகாந்த் கூட்டணி உறுதியானாலும் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்ற சிக்கலால் பாமக அக்கூட்டணிக்குள் செல்ல முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது.

English summary
BJP moves towards Aiadmk for election alliance, says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X