நீங்க வேணா பாருங்க.. மகாவிஷ்ணு கைதுக்கு, நீதிமன்றத்தில் அரசு நன்கு வாங்கிக் கட்டப்போகிறது- நாராயணன்
பல்லடம் : சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவின் வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு செல்லும் போது தமிழக அரசு குட்டுப்படுவது நிச்சயம் என தமிழக பாஜக துமைத் தலைவர் நராயணன் திருப்பதி கூறியுள்ளார். ஒன்இந்தியாதமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியிலும் பின்னர் அவர் திருப்பூரில் அளித்த பத்திரிக்கையாளர் பேட்டியின்போதும் இதை தெரிவித்தார்.
நாராயணன் திருப்பதி கூறியதாவது: சென்னை அரசு பள்ளியில் சொற்பொழிவாற்றுவதற்கு மகாவிஷ்ணுவை பள்ளிக் கல்வித் துறைதான் அழைத்துள்ளது.

அவரை வைத்து எழுந்திருக்கும் சர்ச்சை முழுவதிற்கும் காரணம் அமைச்சர் அன்பில் மகேஷ்தான் பொறுப்பாளி. மேலும் இந்த விஷயத்தில் தவறு நடந்துள்ளது என அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அதனால் தவறுக்குப் பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு ஆசிரியர்களை மாற்றம் செய்து மகாவிஷ்ணுவை கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் துக்ளக் ஆட்சி நடத்துகிறார்கள். எப்படியும் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு செல்லும். ஏற்கெனவே பல வழக்குகளில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசிற்கு குட்டு விழுந்துள்ளது.
அது போல் மகாவிஷ்ணு மீதான வழக்கிலும் தமிழக அரசு மிக காட்டமான விமர்சனங்களை எதிர்கொள்ளும். இது நிச்சயம். அமைச்சர் அன்பில் மகேஷின் ஊரான அன்பில் பகுதியில் பள்ளி முதல்வர் ஒருவரின் மகன் மருத்துவராக உள்ளார். அவர் அங்குள்ள பள்ளிக் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை மறைப்பதற்காகவே மகாவிஷ்ணு வழக்கை பரபரப்பாக்கி அவரை பலிகடாவாக்கியுள்ளனர் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பரம்பொருள் அறக்கட்டளையை சேர்ந்த ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வரவழைக்கப்பட்டார்.
இவர் தானே கடவுள் என கூறிக் கொண்டு பல்வேறு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் உள்நாடு, வெளிநாடுகளிலும் அந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அந்த பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு பேசுகையில் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் ஏழைகளாகவும் மாற்றுத்திறனாளிகளாகவும் கருப்பாகவும் பிறக்கிறார்கள் என சிறிதும் மனசாட்சியே இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படுமே என்றும் யோசிக்காமல் மூடநம்பிக்கை கருத்தை மாணவர்களிடம் திணிக்க முயற்சித்தார்.
அப்போது இதை அங்கிருந்த கண் பார்வையற்ற ஆசிரியர் சங்கர் தட்டி கேட்டார். அவரையும் "நீங்கள் முதன்மை கல்வி அலுவலரை விட அறிவானரா" என கேட்டு மிகவும் அசிங்கப்படுத்தி பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்த அவர் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என பேசினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை செப்டம்பர் 20-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சித்தர் சொன்னதால்தான் பேசினேன். சித்தர்கள் என்னிடம் பேசுவார்கள், அவர்களே என்னை வழிநடத்துவார்ள். பள்ளியில் நான் ஏதும் தவறாக பேசவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. மாணவிகளை நல்வழிப்படுத்தும் விதமாகவே பேசினேன். பல இடங்களில் இது போல் பேசியுள்ளேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் பெண் போலீஸாருக்கு எதிராகவும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் அவதூறு பேசியதாக அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது தமிழக அரசை, உயர்நீதிமன்றத்தில் காட்டாமாக விமர்சித்து சங்கரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications