For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் பாஜகவில் சேர்ந்துவிட்டேனா?.. சுத்த பொய் பாஸ்.. வரலட்சுமி சரத்குமார் பதில்

பாஜக கட்சியில் தான் சேர்ந்துவிட்டதாக வந்த செய்து வெறும் வதந்தி என்று பாஜக தலைவர் முரளிதரராவை சந்தித்த பின் வரலட்சுமி சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    முரளிதரராவை சந்தித்த பின் வரலட்சுமி சரத்குமார் பேட்டி

    சென்னை: பாஜக கட்சியில் தான் சேர்ந்துவிட்டதாக வந்த செய்து வெறும் வதந்தி என்று பாஜக தலைவர் முரளிதரராவை சந்தித்த பின் வரலட்சுமி சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.

    பாஜக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கடந்த சில நாட்களாக இந்தியா முழுக்க இருக்கும் பிரபலங்களை சென்று நேரில் சந்தித்து பேசி வருகிறார். ஆனால் இந்த சந்திப்பு எதற்காக என்று தெரிவிக்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு மாநில பிரபலங்களை சந்திக்கும் போதும் அம்மாநில பாஜக தலைவர்கள் உடன் இருக்கிறார்கள்.

    BJP officials meet Varalaxmi Sarathkumar, She tweets about the rumors

    அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள சில பிரபலங்களை முரளிதர ராவ் சந்தித்தார். அவருடன் தமிழிசை சௌந்தர்ராஜனும் இருந்தார். இன்று பல பிரபலங்களை சந்தித்துவிட்டு கடைசியாக தமிழக வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனை சந்தித்தனர்.

    அதன்பின் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரை சந்தித்தனர். இதுகுறித்து வரலட்சுமி டிவிட் செய்துள்ளார்.

    அதில் ''முரளிதரவுடன் சந்திப்பு நடத்தி பாஜக இந்தியாவில் செய்யும் மாற்றங்கள் குறித்து விவாதித்தோம். பெண்கள் பாதுகாப்பு இன்னும் சில விஷயங்கள் குறித்து பேசினோம். மோடி எங்களின் கருத்துக்களை கேட்க ஆர்வமாக இருப்பது சந்தோசமாக இருக்கிறது. பாஜகவில் நான் சேர்ந்ததாக கூறுவது முழுக்க முழுக்க வதந்தி. நான் எந்த கட்சியிலும் இல்லை.'' என்றுள்ளார். முன்னதாக முரளிதரராவ், இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

    English summary
    BJP officials meet Varalaxmi Sarathkumar, She tweets about the rumors ''Had a wonderful meeting regarding the changes that BJP can do to better our nation with @PMuralidharRao regarding womens safety n other issues..good to know @narendramodi ji wants our feedback..contrary to all the baseless rumours,I have not joined BJP or any other political party'' in her account.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X