For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் குளறுபடி.. காங்கிரஸின் செல்வபெருந்தகை குற்றச்சாட்டு

கர்நாடக மாநில தேர்தலுக்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை தள்ளி போட முயற்சி நடப்பதாக தமிழக காங்கிரஸ் பழங்குடியினர் பிரிவு தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

By Kmk Esakkirajan
Google Oneindia Tamil News

நெல்லை: கர்நாடக மாநில தேர்தலுக்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை தள்ளி போட முயற்சி நடப்பதாக தமிழக காங்கிரஸ் பழங்குடியினர் பிரிவு தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பெரும்வாரியான மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பட்டியலின மக்களை காங்கிரசில் அதிக அளவில் இணைத்து வருகிறோம். பட்டியலின மக்களின் பிரச்சனைக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும். அம்பேத்கர் பட்டியிலன மக்களின் உரிமைகளை பெற்று தந்தார்.

bjp postpones th process of cauvery management authority

இந்திரா காந்தி பொருளாதார அடிப்படையில் பட்டியலின மக்களை வலுவாக்கினார். கிராமங்கள் தோறும், வீடுகள் தோறும் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை எடுத்து சொல்லும் வகையில் எஸ்சி, எஸ்டி மாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இதில் எஸ்சி அணி அகில இந்திய தலைவர் ராஜி, தமிழக காங் தலைவர் திருநாவுக்கரர் ஆகியோரை அழைத்து வர ஏற்பாடு செய்வோம். கார்த்தி சிதம்பரம் கைது மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கையாகும். இது தொடர்பாக அவர் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளித்த வரும் நிலையில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க தற்போது கர்நாடக அரசு முயலாது. ஏன் என்றால் அங்கு தேர்தல் நேரம். இதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை தள்ளி போட அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஐஐடியில் தமிழ்தாய் வாழ்த்து படிப்பதற்கு பதில் மத்திய அமைச்சர் முன்னிலையில் சமஸ்கிருத்தில் பாடியிருப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
BJP postpones the process of Cauvery Management Authority.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X