For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி டீக்கடையில் அய்யருக்கு டீ ஆத்துற வேலை.. திருச்சி பாஜகவின் 'டகால்ட்டி' போராட்டம்!

Google Oneindia Tamil News

BJP protest: In 'Modi' tea stall, 'Aiyar' gets vendor's job
திருச்சி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை டீ விற்றவர் என்று கிண்டலடித்துப் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர அய்யருக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருச்சி பாஜகவினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.

அதில், தெருவோர நாடகம் போல ஒன்றை வடிவமைத்து அதில் மணிசங்கர அய்யரை கிண்டலடித்து காட்சிகள் வைத்து மக்களைக் கவர்ந்திழுத்தனர்.

அந்த நாடகத்திலிருந்து சில சீன்கள்...

அது நரேந்திர மோடி டீக்கடை. மோடி டீ ஸ்டால்- டீ மாஸ்டர் தேவை - இப்படிக்கு மணிசங்கர அய்யர் என்று போர்டு ஒன்று தொங்க விடப்பட்டிருந்தது

கடையில் மணிசங்கர அய்யர் வேடத்தில் ஒருவர் டீ ஆற்றுகிறார். பின்னர் டீ கேட்டு வருகிறவர்களுக்கு டீயும் கொடுக்கிறார்.

இப்படி போய்க் கொண்டிருந்தது அந்த நாடகம். இதை நூற்றுக்கணக்கானோர் கூடி ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சினி்மாவில் வருவது போல திடீரென திமுதிமுவென போலீஸார் வந்தனர். நாடகம் போட்டு போராட்டம் நடத்திய 30 பாஜகவினரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அத்தனை பேரும் மாலையிலேயே விடுவிக்கப்பட்டு விட்டனர்.

English summary
In a tit-for-tat, BJP activists on Sunday turned the tables on senior Congress leader Mani Shankar Aiyar by staging a street play here, featuring a tea stall named after Gujarat chief minister Narendra Modi where Aiyar was symbolically employed as a vendor. The drama was enacted as part of a protest against Aiyar's comment that Modi cannot become the PM but could be offered the job of a tea seller at the Congress' national council meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X