For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தி திணிப்பு: ஸ்டாலின் மீது 'பொர்க்கி' புகழ் சு.சுவாமி பாய்ச்சல்

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்கள் இந்தி மொழியை மாற்று மொழியாக பயில விரும்புவவதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில், ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுதியதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

BJP senior leader Subramanian swamy condemned stalin as 'Shree 420 - II ' for his anti hindi advise

பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம், அமைச்சர்கள் இந்தியில் உரையாற்ற, அறிக்கை வெளியிட ஒப்புதல் என மத்திய அரசு தொடர்ந்து இந்தியை திணித்தால் இன்னொரு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார். ட்விட்டர், முகநூல் பக்கங்களில் வீடியோ பதிவாகவும் இந்தி திணிப்புக்கு எதிரான பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

ஸ்டாலினின் எச்சரிக்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பொர்க்கி புகழ் சுப்ரமணியன் சுவாமி, தமிழக மக்கள் சமஸ்கிருதத்தை அடித்தழுவிய இந்தி மொழியை மாற்றாக கருதுவதாக தெரிவித்துள்ளார். இந்திக்கு எதிரான தனது அறிவுரை மூலம் ஸ்டாலின் ஸ்ரீ 420 பார்ட் 2வாக உதயமாகி வருவதாகவும் சுப்ரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.

இந்திய ஆட்சி மொழியாக 16 மொழிகள் உள்ள நிலையில் சமஸ்கிருதத்தை தழுவிய இந்தி மொழி விரைவில் ஆட்சி மொழியாக்கப்பட உள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி ட்வீட்டியுள்ளார்.

English summary
BJP senior leader subramanian swamy told in his twitter page that Stalin with his damad as adviser is emerging as "Shree 420-II"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X