For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக நிலவரம் தெரியாமல்.. தமிழகத்தில் பாஜக ஒரே குஷி, கொண்டாட்டம்., குதூகலம்...!

கர்நாடகா தேர்தலில் தாம் அவுட்டாகிவிட்டது கூடாது தெரியாமல் தமிழகத்தில் சில பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவா, மேகாலயா ‘ஆடுபுலி ஆட்டத்தை’ கர்நாடகாவில் அரங்கேற்றுமா பாஜக?- வீடியோ

    சென்னை: கர்நாடகா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை ஏற்படாததை அடுத்து இந்தியா முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்ட போதிலும் தமிழகத்தில் இன்னும் கொண்டாட்டங்கள் நடைபெற்றுத்தான் வருகிறது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்திலிருந்து பாஜக முன்னிலை வகித்து வந்தது. இதையடுத்துகாலை முதல் பெங்களூர் பாஜக தலைமையகத்தில் தொண்டர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

    BJP stops celebrations all over India

    டெல்லி பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். ஆனால் இந்த சந்தோஷம் சிறிது நேரம் மட்டுமே நிலைத்தது.

    இந்நிலையில் மதியத்துக்கு பிறகு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. அதன்பிறகு எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து ஜேடிஎஸ் கட்சியை தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சி ஆதரவு கோரியது. குமாரசாமி முதல்வராக இருக்கட்டும் என்று சோனியா டீல் பேசியதை அடுத்து கூட்டணிக்கு ஒப்புதல் அளித்தார் தேவ கௌடா.

    இதுபோன்ற எதிர்பாராத அதிர்ச்சிகரமான டுவிஸ்ட்டால் இந்தியா முழுவதும் பாஜகவினர் தங்கள் கொண்டாட்டங்களை நிறுத்திக் கொண்டனர். எனினும் கர்நாடகத்தின் களநிலவரம் தெரியாமல் தமிழகத்தில் சில தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுதான் வருகின்றனர்.

    English summary
    BJP stopped celebrations all over india following the final figures, in TN some cadres celebrated without knowing the latest development in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X