For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஜியை விட்றாதீங்க.. இவருக்கும் ஸ்கெட்ச் போடுங்க.. கலகலக்கும் திமுக.. செக் வைக்க வரும் வியூகங்கள்!

திமுக மூத்த தலைவர்களுக்கு பாஜக குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவின் நடவடிக்கையால் பதட்டத்தில் இருக்கும் திமுக தரப்பு

    சென்னை: "மாஜியை விட்றாதீங்க.. இவரையும் விட்றாதீங்க.." என திமுகவை விரட்டி விரட்டி பாஜக செக் வைத்து வருவதாக கூறப்படுகிறது.

    மோடியின் முதல் ஆட்சியில் இருந்தே ஊழலுக்கு எதிரான போக்கு என்பதை வலியுறுத்தி வருகிறது. இப்போதைய 2-வது முறை ஆட்சியில் ஊழலுக்கு எதிரான செயலை கையில் எடுத்து வருகிறது. அதன்படி, ஊழல் செய்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைதாகி வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    சில தினங்களுக்கு முன்பு எச்.ராஜா பேசும்போது, "இங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ஊழல் செய்திருக்கிறார்... அவர் தான் அடுத்த கைது" என்று ஒரு பேட்டியில் சொன்னார். இதையடுத்து அந்த நபர் யாராக இருக்ககூடும் என்றும், கண்டிப்பாக அது திமுக அல்லது கூட்டணி கட்சி சம்பந்தப்பட்டவராக இருக்கக்கூடும் என்றும் கருத்துக்கள், யூகங்கள் பலமாக எழுந்தன.

    தம்பிதுரையை கட்டாயப்படுத்தி கரூருக்கு அனுப்பிய இ.பி.எஸ்... காரணம் என்ன?தம்பிதுரையை கட்டாயப்படுத்தி கரூருக்கு அனுப்பிய இ.பி.எஸ்... காரணம் என்ன?

    ரெய்டு

    ரெய்டு

    இந்த சமயத்தில்தான், திமுகவின் ஜெகம் போற்றும் புள்ளியின் கல்வி நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.. மாஜி அமைச்சரின் கணக்கில் வராத 20 கோடி உள்ளிட்டவற்றை அள்ளிக் கொண்டு போனதாக ஒரு தகவல் பறந்தது. இப்படி மாஜியை கட்டம் கட்டிய நிலையில்தான், திரும்பவும் ஒரு புள்ளிக்கு பாஜக செக் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    களங்கம்

    களங்கம்

    அதாவது நெருங்கிய உறவுக்கு ஸ்கெட்ச் போட்டால், கட்சியை எளிதாக களங்கப்படுத்தி விடலாம் என்று கணக்கு போட்டுள்ளது. அவருடன் இருக்கும் நட்பு வட்டாரங்களையும் பிரித்து தன்னோடு இழுத்து கொள்ளும் முயற்சியையும் பாஜக கையில் எடுத்து உள்ளது. நேரடியாக மோதி, ஒருவரை வலுவிழக்க செய்வது ஒருவிதம் என்றால், ஒருவருடன் மோதாமலேயே அவரை சுற்றி இருப்பவர்களை கழட்டி விடும் முயற்சியை கையாளுவது இன்னொரு வித பிளானாக இருக்கிறது.

    மேல்முறையீடு

    மேல்முறையீடு

    அதேபோல 2ஜி விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளனராம். இந்த வழக்கில், ஆ.ராசா, எம்பி கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த நிலையில், இதனை துரிதப்படுத்தும் வேலையில் பாஜக இறங்க உள்ளதாம். அதேபோல, சாதிக்பாட்சா தற்கொலை விவகாரத்தையும் கிண்டி எடுத்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    பாஜக பார்வை

    பாஜக பார்வை

    அந்த வகையில் திமுகவை சுற்றி பாஜகவின் பார்வை இன்னும் அழுத்தமாகத்தான் விழுந்து கொண்டிருப்பதுடன், திமுகவை சுற்றியே டெல்லி வலைகள் பின்னப்பட்டு வருகின்றன.. இந்த வலையிலிருந்து திமுக எப்படி தப்பும்.. தப்ப முடியுமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.!

    English summary
    sources say that bjp target dmk party's senior leaders, former ministers and officials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X