கீழே விழுந்தால் தானே கை ஊன்ற? ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி!

சென்னை: தமிழகத்தில் பாஜக கை கூட ஊன்ற முடியாது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்ததற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார்.
நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில், முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பேசிய மு.க.ஸ்டாலின் வருமான வரித்துறை சோதனை நடத்தியது மக்களுகு உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் என்றார்.

ஆனால் பாஜக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டால், தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார். இதற்கு தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக கை ஊன்றக்கூட முடியாது ..ஸ்டாலின் கீழேவிழுந்தால்தானே கைஊன்ற?ஆழவிதைஊன்றி வேர்கள்பரப்பிஆல்போல்தழைத்து விழதுகள் பதித்துவளர்வோம்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 21, 2017
அதாவது ஸ்டாலின் குறிப்பிட்ட கருத்தை மேற்கோள் காட்டிய அவர், கீழே விழுந்தால் தானே கை ஊன்ற என தெரிவித்துள்ளார். மேலும் ஆழ விதை ஊன்றி வேர்கள் பரப்பி ஆலமரம் போல் தழைத்து விழுதுகள் பதித்து வளர்வோம் என்றும் தமிழிசை தனது டிவிட்டில் கூறியுள்ளார்.