For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக!

பாஜக தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அமித்ஷா இன்று சென்னை வந்தார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் ஆலோசனை நடத்துவதற்காக கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்துள்ளார்.

வரவேற்பு பேனர்கள்

வரவேற்பு பேனர்கள்

அமித்ஷா வரவேற்க பாஜவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்தனர். அவரை வரவேற்பதற்காக சென்னை நகரின் பல இடங்களில் வண்ண வண்ண வரவேற்பு பேனர்கள் களைகட்டின.

பேனர்களால் அவதி

பேனர்களால் அவதி

பாஜக தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்களால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

உத்தரவை மதிக்காமல்

உத்தரவை மதிக்காமல்

ஏற்கனவே அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தூர தூக்கிப்போட்டுவிட்டு பாஜக சென்னையின் பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்களை வைத்திருந்தனர்.

அரசிடம் விளக்கம்

அரசிடம் விளக்கம்

இந்த பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி தமிழக அரசு தலைமை வழக்கறிஞரிடம் பேனர் குறித்து விளக்கம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP workers keeps so many banners to welcome Amitshah. Amit shah has come to chennai to discuss with BJP executives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X