For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடைக்கு தடை.. பேராசிரியையின் கறுப்பு துப்பட்டாவை அகற்றியது போலீஸ்!

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடை அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜனாதிபதி பங்கேற்கும் விழாக்களில் கருப்பு உடைக்கு தடை-வீடியோ

    சென்னை: பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடை அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார். மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டம் வழங்கி வருகிறார்.

    Black dress banned in Chennai University at President program

    இந்நிலையில் குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் கறுப்பு ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. பேராசிரியை ஒருவர் அணிந்து சென்ற கறுப்பு துப்பட்டாவை அகற்ற போலீசார் உத்தரவிட்டனர்.

    காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழகத்தில் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கறுப்புக்கொடி காட்டி வருகின்றன.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Black dress banned in Chennai University at President program. President Ramnath Govind has participated in the Chennai university convocation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X