For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீலம் போர்த்திய மூணார்.. 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி கேரளாவில் பூத்தது

12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி மலர், கேரளாவின் மூணாரில் தற்போது பூத்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி மலர்-வீடியோ

    மூணார்: 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி மலர், கேரளாவின் மூணாரில் தற்போது பூத்து இருக்கிறது.

    உலகம் எங்கும் குறிஞ்சி மலர், 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். கொடைக்கானல், மூணார், இடுக்கி ஆகிய பகுதியில் அதிகம் பூக்கும் இந்த நீல குறிஞ்சி மலர் உலகம் முழுக்க பிரபலம்.

    Blissfull Neelakurinji flower blossoms in the hills of Kerala after 12 years

    கேரளாவில் உள்ள மூணாரின் ஆனைமலையில் பூக்கும் நீல குறிஞ்சி மலர் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றது. சரியாக 12 வருடங்களுக்கு முன்பு 2006ல் கடைசியாக இந்த மலர் பூத்தது. அப்போது உலகம் முழுக்க பல நாடுகளில் இருந்து மலரை பார்க்க மக்கள் மூணார் வந்திருந்தார்கள்.

    சுமார் 2 மாதம் இந்த மலர் பூத்து இருக்கும். இந்த மலர் மூணாரில் வரும் அக்டோபர் வரை பூத்து இருக்கும். இதை பார்க்க இப்போதே அங்கு கூட்டம் அதிகரித்து இருக்கிறது.

    சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூ பூத்து இருக்கிறது. பார்க்கவே நீல நிற போர்வை போர்த்தியது போல இந்த பகுதி காட்சி அளிக்கிறது.

    English summary
    Blissfull Neelakurinji flower blossoms in the hills of Kerala after 12 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X