For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10ம் வகுப்பு, ப்ளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் அட்டவணை வெளியீடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. தற்போது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் டிசம்பர் மாதம் 7ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் வழக்கமாக நடைபெறும். இதற்காக தயாராகி வந்த நிலையில் நவம்பர் 8ம் தேதி முதல் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனால் தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்,

Board publishes timetable for SSLC, half-yearly exams

அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு ஜனவரி 11ம் தேதி தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்புக்கான கால அட்டவணை விவரம்:

ஜனவரி 11 - மொழிப்பாடம் முதல் தாள்
ஜனவரி 12 - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
ஜனவரி 13 - ஆங்கிலம் முதல் தாள்
ஜனவரி 14 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜனவரி 18 - வணிகவியல், வீட்டு மனையியல், புவியியல்
ஜனவரி 19 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி,
ஜனவரி 21 - இயற்பியல், பொருளாதாரம்,
ஜனவரி 22 - வேதியியல், கணக்குப் பதிவியல்,
ஜனவரி 25 - உயிரியல், தாவரவயில், வரலாறு, வணிகக் கணிதம்
ஜனவரி 27 - கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, புள்ளியியல்,

தேர்வுகள் காலை 10 முதல் 1.15 வரை நடைபெறும். இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.

10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் அட்டவணை:

ஜனவரி 11 - மொழிப்பாடம் முதல்தாள்
ஜனவரி 13 - மொழிப்பாடம் 2ம் தாள்
ஜனவரி 18 - ஆங்கிலம் முதல் தாள்
ஜனவரி 20 - ஆங்கிலம் 2ம் தாள்
ஜனவரி 22 - கணிதம்
ஜனவரி 25 - அறிவியல்
ஜனவரி 27 - சமூக அறிவியல்

அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு

10 முதல் 12ம் வகுப்பு தேர்வுகளுடன் சேர்த்து 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் ஜனவரி 11-ல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளுக்கு முன்னர் அரையாண்டு தேர்வுகள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

English summary
The Directorate of School Education announced the timetable for SSLC and Higher Secondary (Plus 2) half-yearly examination to be held in January this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X