• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"பொட்டு" கொலையில் ஸ்டாலின், அழகிரிக்கு தொடர்பில்லை: பாண்டியின் "அட்டாக்" வாக்குமூலம்

By Mayura Akilan
|

மதுரை: மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் நீண்ட நாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டியின் அரெஸ்ட் மதுரை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் கஸ்டடியில் பொட்டு கொலைக்கான மூலகாரணத்தை கூறிய அட்டாக் பாண்டிய இந்த கொலையில் ஸ்டாலின், அழகிரிக்கு தொடர்பில்லை என்று விசாரணையில் தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் கைதுசெய்யப்பட்டு அட்டாக் பாண்டி முதன்முறையாக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, ‘அட்டாக்'கின் உறவினர்களும் ஆதரவாளர்களும் குவிந்திருந்தனர். அட்டாக்கின் தாய் ராமுத்தாயும், மனைவி தயாளுவும் உறவினர்கள் எல்லோரும் ஒப்பாரி வைத்து அழுதனர். சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

முகமூடி போட்டு அழைத்து வரப்பட்ட அட்டாக் பாண்டியை திரும்ப அழைத்துச் சென்றபோது, முகமூடி அணியாமல் அழைத்துச் செல்ல உத்தரவிடுமாறு அட்டாக்கின் வழக்கறிஞர்கள் முறையிட்டார்கள். அதனால், முகமூடி இல்லாமல் வெளியே வந்தார். மனைவியும், தாயும் அழுவதைப் பார்த்த அட்டாக் பாண்டி ‘‘யாரும் அழ வேண்டாம்... ஆத்தாவை அழாமல் பார்த்துக்குங்க'' என்றார்.

விசாரணை வளையத்தில் அட்டாக்

விசாரணை வளையத்தில் அட்டாக்

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கடந்த சிலதினங்களுக்கு மும்பையில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டியை நான்கு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து மதுரை ஆயுதப்படை மைதான வளாகத்தில் உள்ள சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

அட்டாக் பாண்டி வாக்குமூலம்

அட்டாக் பாண்டி வாக்குமூலம்

அட்டாக் பாண்டியிடம் மதுரை நகர் சட்டம், ஒழுங்கு துணை ஆணை யர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா, ஆய்வாளர்கள் கோட்டைச்சாமி, பெத்துராஜ் ஆகியோர் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், திமுக ஆட்சியின்போது வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கு பொட்டு சுரேஷ்தான் காரணம். இது எனக்கு அரசியல் ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தியது. இழந்த இடத்தை மீண்டும்பெற பகீரத முயற்சி எடுத்தபோதும், பொட்டு சுரேஷ் தடுத்துவிட்டார். அவரை மீறி என்னால் வளர முடியாத நிலை ஏற்பட்டது.

ஒட்டிய பொட்டு

ஒட்டிய பொட்டு

2011 சட்டப் பேரவை தேர்தலில் திமுக தோல்வியடைந்த பின்னர் அழகிரியிடம் பொட்டு சுரேஷ் செல்வாக்கு குறைந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் நெருங்கிச் சென்றேன். சிறிது காலம் ஒதுங்கியிருந்த பொட்டு சுரேஷ் மீண்டும் அழகிரியிடம் ஒட்டிக்கொண்டார்.

அழகிரியிடம் நெருக்கம்

அழகிரியிடம் நெருக்கம்

கட்சியினருக்கு பதவி பெற்றுத்தருவது உட்பட அனைத்து விஷயங்களிலும் அவரது செல்வாக்கு தொடர்ந்து வளர்ந்து பழைய நிலையை எட்டியது. இதனால் அழகிரியிடம் என்னால் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

பண மோசடி

பண மோசடி

கீரைத்துறை பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான அரிசி ஆலைகள் உட்பட பல தரப்பில் இருந்தும் எனக்கு மாமூல் கிடைக்கும். இப்பகுதியில் செல்வாக்குடன் இருந்தேன். இப்பகுதியில் ஜெயம் பைனான்ஸ் என்ற பெயரில் செயல்பட்ட நிதி நிறுவனம் மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்ய திட்டமிட்ட தகவல் தெரிந்தது. விசாரித்தபோது கோடிக்கணக்கில் பணப்புழக்கம் நடப்பது தெரிந்தது.

பணத்தை கைப்பற்றிய சுரேஷ்

பணத்தை கைப்பற்றிய சுரேஷ்

நிதி நிறுவன நிர்வாகி அசோக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதைக் கைப்பற்றினேன். இப்பிரச்சினையை பொட்டு சுரேஷிடம் அசோக் கொண்டு சென்றதால் அவர் தலையிட்டார். அசோக்கிடம் பணத்தை பெற்று பொட்டு சுரேஷ், போலீஸ் மூலம் காய் நகர்த்தி என்னை மிரட்டினார். அசோக்கை கடத்தியதாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. என்னை செயல்பட விடாமல் முடக்கி, நிதி நிறுவனத்தை கைப்பற்றினார்.

பொட்டு மீது அதிருப்தி

பொட்டு மீது அதிருப்தி

இச்சம்பவம் என்னை மனதளவில் மிகவும் பாதித்ததுடன் பண வருவாயை தடுத்தது. பொட்டு சுரேஷ் செல்வாக்குடன் இருக்கும் வரை நம்மால் இனி பழைய செல்வாக்குடன் வாழ்வது கஷ்டம் என்ற நிலையில் தவித்தேன். நான் பொட்டு சுரேஷ் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்த தகவல் அவருக்கும் தெரிந்தது.

கொல்ல திட்டம்

கொல்ல திட்டம்

எனது நெருங்கிய உறவினர் திருச்செல்வத்துடன் எனக்கு குடும்பப் பிரச்சினை இருந்தது. இதையறிந்த பொட்டு சுரேஷ் என்னை தீர்த்துக்கட்ட திருச்செல்வம் மூலம் முயற்சித்தது தெரிந்தது. அவர் ஆட்களை ஏற்பாடு செய்த தகவல் எனது மைத்துனர் விஜயபாண்டி மூலம் தெரிந்தது. இதை அறிந்த எனது ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.

யாருக்கும் தெரியாது

யாருக்கும் தெரியாது

அழகிரியிடம் என்னை நெருங்கவிடாமல் பொட்டு சுரேஷ் தடுத்ததால் 2012 டிசம்பரில் மு.க.ஸ்டாலினை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, அவரது ஆதரவாளராக மாறினேன். பொட்டு சுரேஷ் கொலைக்கு முன் இது குறித்த தகவல் ஸ்டாலினுக்கோ, அழகிரிக்கோ தெரிய வாய்ப்பில்லை என அட்டாக் பாண்டி விசாரணையில் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

வீடியோவில் பதிவு

வீடியோவில் பதிவு

அட்டாக் பாண்டி கூறியது எந்த அளவிற்கு உண்மை என்று நினைக்கும் போலீசார், மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அட்டாக் பாண்டியிடம் நடைபெறும் விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது. போலீசார் யாரும் துன்புறுத்தவில்லை என தன்னை சந்திக்க வந்த வழக்கறிஞரிடம் அட்டாக் பாண்டி தெரிவித்தார். நடந்ததை மறைக்காமல் கூறும்படி போலீஸார் கேட்டதாகவும் கூறியுள்ளார்.

பலிகடா ஆக்குவதா

பலிகடா ஆக்குவதா

அட்டாக் பாண்டியின் கைது மதுரை அரசியலில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தன்னை மட்டும் சிக்கவைத்திருப்பதாகச் ஏற்கனவே கூறியிருந்தார் ‘அட்டாக்' பாண்டி. அதாவது, ‘பொட்டு' சுரேஷுக்கு வெளியில் தெரியாமல் நிறைய எதிரிகள் இருந்திருக்கிறார்கள் என்பதே ‘அட்டாக்' பாண்டியின் கருத்து. ‘அந்தக் கோணத்தில் போலீஸ் ஏன் விசாரணை நடத்தவில்லை?' என்று கூறியிருந்த அட்டாக் பாண்டி, இப்போது அட்டாக் பாண்டி கொடுத்துள்ள வாக்கு மூலம் முரணாக உள்ளது. இனி மூன்றுநாள் நடைபெற உள்ள விசாரணையில் அனைத்தையும் சொல்லிவிடுவார் என்று போலீஸ் தரப்பு நம்புகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Attack Pandi the main accused in Pottu Suresh murder case has said that both MK Azhagiri and MK Stalin have no link with the murder plot.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more