For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா டீமுக்கு அடுத்தடுத்து அடிதான்.. சின்னத்தை தேர்ந்தெடுப்பதிலும் ஓ.பி.எஸ் அணி சாணக்கியத்தனம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் இடைத்தேர்தலில் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நேற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று, காலை 10 மணிக்குள்ளாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் தங்களுக்கான சின்னங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற கட்சி பெயரும், ஆட்டோ ரிக்ஷா சின்னமும் ஒதுக்கப்பட்டது.

Both the AIADMK team have to apply new symbol

சின்னம் மாற்றம்

ஓபிஎஸ் அணிக்கு, அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ சின்னம் வேண்டாம் என சசிகலா தரப்பு அடம் பிடித்து, தொப்பி சின்னம் கேட்டதால் பிறகு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் நினைவு

பொது நிகழ்ச்சிகளில் எம்ஜிஆர் எப்போதுமே தொப்பியுடன் காணப்பட்டவர் என்பதால் அதை சசிகலா அணி வலியுறுத்திக் கேட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால் எலக்ட்ரிக் போல் சின்னம் பார்க்க இரட்டை இலை சின்னம் போல இருப்பதால் இரட்டை இலைக்கு வாக்களிக்கும் பழக்கம் உள்ள மக்கள் ஓ.பி.எஸ் அணிக்கு அறிந்தோ, அறியாமலோ வாக்களிக்க வாய்ப்புள்ளது.

காலதாமதம்

இதை லேட்டாக புரிந்து கொண்ட சசிகலா டீம், தொப்பியையாவது கைப்பற்றி எம்ஜிஆரை முன்னிருத்தி வாக்கு கேட்கலாம் என திட்டமிட்டு அதை பெற்றுள்ளது. ஆனால் முதலிலேயே எலக்ட்ரிக் போல் சின்னம் தங்களுக்கு வேண்டும் என கேட்காமல் மெத்தனமாக இருந்துவிட்டது சசிகலா டீம்.

கோட்டை விட்ட சசிகலா டீம்

நேற்று சின்னத்தை முடக்கவிட்டு பின்னடைவை சந்தித்த சசிகலா டீம், இன்று இரட்டை இலை போன்ற வடிவு கொண்ட எலக்ட்ரிக் போல் சின்னத்தை தவறவிட்டு கோட்டைவிட்டுள்ளது. அடுத்தடுத்து இரு நாட்களில் பன்னீர் செல்வம் அணி முன்னடைவையும், சசிகலா அணி பின்னடைவையும் சந்தித்துள்ளது.

சாணக்கியத்தனம்

டெல்லியில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன் கூறுகையில், அதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற பெயரை நாங்கள் பெற்றுள்ளதே முதல் வெற்றிதான். எலக்ட்ரிக் போல் சின்னத்தை பெற்றது பன்னீர்செல்வத்தின் அரசியல் சாணக்கியத்தனத்தை காட்டுகிறது என புகழாரம் சூட்டினார்.

English summary
Both the AIADMK team have to apply new symbol at election commission on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X