For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் “பிரம்ம கமலம்”- பழனியில் நேற்று பூத்துக் குலுங்கியது!

Google Oneindia Tamil News

பழனி: பழனியின் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் மலர் நேற்று இரவு பூத்துக் குலுங்கியது.

பழனி திரு ஆவினன் குடிகோவிலில் பேஸ்காரராக பணிபுரிந்தவர் ராஜா.

இவர் தனது மாடி வீட்டு தோட்டத்தில் பலவகை மலர்களை வளர்த்து வந்தார். மைசூரில் இருந்து அபூர் வகை மலரான பிரம்ம கமலம் என்ற செடியை வளர்த்திருந்தார்.

பக்தி பரவச வழிபாடு:

பக்தி பரவச வழிபாடு:

இந்த மலர் நேற்று இரவு மொட்டு விடத்தொடங்கியது. இரவு 11.45 மணிக்கு மலர்ந்த உடன் அப்பகுதி பொதுமக்கள் காத்திருந்து பக்தி பரவசத்துடன் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

பிரம்மனின் நாபிக் கமலம்:

பிரம்மனின் நாபிக் கமலம்:

இந்த அதிசய பூ வட மாநிலங்களில் மட்டுமே உள்ளது. இலையில் இருந்து பூக்கும் இந்த மலர் பிரம்மனின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றுவது போல அமைந்திருப்பதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுகிறது.

தெய்வீகத் தன்மை கொண்ட பூ:

தெய்வீகத் தன்மை கொண்ட பூ:

மருத்துவ குணமும், தெய்வீக தன்மையும் வாய்ந்த இந்த மலர் வருடத்தில் ஒரு முறை மட்டுமே பூக்கும். அதுவும் இலையில் இருந்து பூத்து ஒரே நாளில் சுருங்கி விடும்.

மலரும் நேரப் பலன்கள்:

மலரும் நேரப் பலன்கள்:

இந்த அதிசய மலரை அது மலரும் நேரத்தில் கண்டு தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதனால் இந்த மலரை அப்பகுதி பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்தனர்.

English summary
A year once Brahma kamalam flower brings happiness yesterday in Palani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X