For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிராமணர்களை கேலி செய்யும் சினிமாக்கள்... வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை..

Google Oneindia Tamil News

சென்னை: பிராமண ஜாதியை இழிவாகவும், கேலியும் கிண்டலும் செய்து சினிமாவில் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் சித்தரிப்போர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீ்ழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளது அந்தணர் முன்னேற்ற கழகம்.

சீ. ஜெயப்பிரகாஷை தலைவராகக் கொண்ட அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Brahmin party make many demands

தீர்மானங்கள்:

தமிழகத்தில் உள்ள கோவில்களில் உள்ள அர்ச்சகர் சிவாச்சாரியார்கள் மற்றும் புரோகிதர்கள், வைதீகர்கள், சமையல் கலைஞர்களுக்கு அந்தணர் நல வாரியம் அமைக்க வேண்டும்.

பிராமண ஜாதியை இழிவாகவும், கேலியும் கிண்டலும் செய்து சினி்மா மீடியாக்களில் கேவலமாகவும், கீ்ழ்த்தரமாகவும் சித்தரிப்போர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிராமணர்கள் பூனூல் அணிவது, குடுமி வைத்துக் கொள்வது சமூகம் மற்றும் மனித உரிமை. அதை எதிர்த்து பிராமணர்களுக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் பணிபுரியும் அந்தணர், அர்ச்சகர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் அரசு பணியாக நியமித்து குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ. 10,000 வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.

பிராமணர்கள் கலை, கலாச்சாரத்தைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும்.

உச்சநீதிமன்றம் வழங்கிய இட ஒதுக்கீடு சதவீதத்தை தமிழக அரசு கருத்தில் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும்.

கணவரை இழந்த பிராமணப் பெண்களுக்கு அரசு பணியிடம் வழங்கிட வேண்டும். சிறு குறு தொழில் புரிய தொழில் நல வாரியம் அமைக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் 100 சதவீத மதிப்பெண் பெற்றும் அந்தண சமுதாய இளைஞர்களை மத்திய மாநில அரசு புறக்கணிக்கிறது. இதனால் வெளிநாடு சென்று பணிபுரிந்து ஊதியம் பெறுவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம் அடைகிறது.

சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்து அந்தண சமுதாயத்தை புறக்கணிப்பதை வன்மையாக எதிர்க்கிறோம். அந்தணர் சமுதாயத்தை அரசு அரவணைக்க வேண்டும்.

English summary
Brahmin's party has made many demands including 3% reservation in job and education.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X