For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking news Live: தமிழகத்தில் மிக கன மழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திற்கு கொடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டது-வீடியோ

    சென்னை: தமிழகத்தில் விடுக்கப்பட்டிருந்த மிக மிக கன மழைக்கான ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

    அதேசமயம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. பரவலாக மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    இதனிடையே தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 8 வரை பரவலாக மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Breaking News live Rain updates

    Newest First Oldest First
    1:11 PM, 6 Oct

    தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விலக்கப்பட்டது

    தமிழகத்தின் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விலக்கப்படுகிறது

    1:09 PM, 6 Oct

    நாளை மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை

    பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவு

    1:09 PM, 6 Oct

    தமிழகத்தில் அடுத்த 45 நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

    இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் 45 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

    1:09 PM, 6 Oct

    கனமழை: தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    நீலகிரியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர்

    திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    தேனியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்

    கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு

    புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

    10:18 AM, 6 Oct

    8ம் தேதி முதல் வட கிழக்குப் பருவ மழையும் பெய்யத் தொடங்கவுள்ளது

    வங்கக் கடலில் 8ம் தேதி தாழ்வு நிலை உருவாகவுள்ளது

    இது ஒடிஷாவை நோக்கி நகரக் கூடும் என்று கணிப்பு

    மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் 8ம் தேதி மிக கன மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு

    தொடர் மழை காரணமாக அனைத்து மாவட்டங்களும் ஆயத்தமாக உள்ளன

    தேசியப் பேரிடர் படையினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்

    English summary
    IMD has warned that TN and Puducherry will get heavy rains for the next five days. Here is the Live update.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X