For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகாரத்தைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கும் போலீஸ் ... எச்சரித்த முதல்வர் நாராயணசாமி : வீடியோ

புதுவையில் போலீஸ் உயர் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கையூட்டு பெற்று வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரவுடிகள் அராஜகம் ஒடுக்கப்படும் என புதுவை முதலவர் நாராயணசாமி

By Suganthi
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுவை காவல்துறையில் உயர் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கையூட்டுப் பெற்று வருவதை கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை முதல்வர் நாரயணசாமி கூறியுள்ளார்.

புதுவையில் நாராயணசாமி பதவியேற்றதில் இருந்து அதிக அளவில் கொலைகள் நடந்து வருகிறது. ஆகையால் குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என புதுவை பாஜக தலைவர் சுவாமிநாதன் கோரிக்கை விடுத்திருந்தார். அதையடுத்து அங்கு ரவுடிகளை அடக்க குண்டர் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

 Bribing police officers will get severe action soon said Narayanasamy

முன்விரோதம் காரணமாகவும் தொழில் போட்டியினாலும் அதிக அளவில் கொலைகள் நடப்பதாக முதல்வர் நாரயணசாமி கூறினார். தற்போது காவல்துறை உயர் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கையூட்டு பெற்று வருகிறார்கள். அவர்களையும் கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் செய்தியாளர்களிடம் கூறினார்.

English summary
In police department higher officials using their power to get bribe and action will be taken on them soon said Puducherry CM Narayanasamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X