For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணப்பெண் தற்கொலை - அமைச்சர் தலைமையில் நடைபெற இருந்த திருமணத்தில் சோகம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வேலூர்: ஆம்பூர் அருகே திருமணத்திற்கு இரு தினங்களுக்கு முன் மணப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரம் அழகாபுரி பகுதியைச்சேர்ந்தவர் வீரராகன் - ராஜேஸ்வரி தம்பதி. இவர்களது பெரிய மகள் கிருஷ்ணவேணிக்கும் ஆம்பூர் அருகில் உள்ள நாச்சார் குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சுப்பிரமணி-விஜயா தம்பதியின் மகன் நடராஜனுக்கும் நாளை (23ஆம்தேதி வெள்ளிக்கிழமை) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் திருமணம் நடத்த முடிவு செய்து அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன.

Bride commits suicide a day before marriage

திருமண அழைப்பிதழ்களை இருவீட்டாரும், உறவினர்கள், நண்பர்கள், கட்சி பிரமுகர்களுக்கும் வழங்கி வந்தனர். இந்நிலையில் திடீரென இன்று கிருஷ்ணவேணி தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலை செய்துக் கொண்டதுக்கான காரணம் பற்றி தெரியவில்லை.

மக்களின் முதல்வர் நல்லாசியுடன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் வீரமணி நடத்தி வைக்கும் திருமணம் என அழைக்கப்பட்ட திருமணத்தில் திருமணத்துக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் தற்கொலை செய்துக் கொண்டது ஆம்பூர் பகுதிமக்களிடமும், அதிமுகவினரிடம் பரபரப்பாக பேசப்படுகிறது.

வழக்கு பதிவு செய்த ஆம்பூர் நகர போலீசார் தற்கொலை செய்து கொண்டது எதனால் காதல் பிரச்சனையா?, வரதட்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
A bride committed suicide a day before her marriage near Aambur, Vellore district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X