For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்செங்கோடு கோவில் மலைப் பாதையில் போக்குவரத்து ஜாம்.. நடு ரோட்டில் தவித்த புதுமணத் தம்பதியர்!

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில் மலை பாதையில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்று திருமண செய்ய வேண்டிய 100 க்கும் மேற்பட்ட மணமக்கள் திருமணம் செய்ய குறித்த முகூர்த்த நேரத்தில் கோவிலை அடைய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

முகூர்த்தத்திற்குள் கோவிலுக்குப் போக முடியாமல் சுப நிகழ்ச்சியில் தடங்கல் ஏற்பட்டதால் மணமக்கள் தவிர பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் பெரும் சங்கடத்துக்குள்ளானார்கள்.

திருசெங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு திருமணம் செய்தால் மிகவும் சிறப்பான செல்வ செழிப்போடு வாழ்க்கை அமையும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இன்று இந்த ஆலயத்தில் 100 க்கும் மேற்பட்ட மணமக்கள் திருமணம் செய்ய ஆலயத்தில் பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இன்று திருமண நாள் என்பதால் 100 ஜோடிகளின் உறவினர்கள் ஆலயம் நோக்கி எராளமான வாகனங்களில் சென்றனர். ஆலயம் அமைந்துள்ள பகுதி மலைப் பாதை என்பதால் குறுகிய இந்தப் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக மணமக்கள் ஏராளமனோர் இந்த நெரிசலில் சிக்கிக் கொண்டனர். அங்கு போக்குவரத்தை சரி செய்ய போதிய போலீசார் இல்லாததால் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறை அலுவலகம், திருசெங்கோடு காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டுள்ளனர்.

Brides and grooms forced to strand in Thiruchengodu temple ghat road

ஆனால் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறித்த முகூர்த்த நேரத்தில் மணமகள் கழுத்தில் மங்கல்யத்தைக் கட்ட தாமதம் ஆனா லோ தடங்கல் ஏற்பட்டலோ அது மணமகளை மட்டும் குறிப்பிட்டு இஷ்டத்திற்கு குறைகள் சொல்லும் நம் சமூகம். இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மணமக்கள் திருமணம் குறித்த நேரத்தில் நடக்காமல் போனதால் புது மணமக்களின் நிலைமை வேதனை அளிப்பதாக அமைந்தது.

English summary
More than 100 Brides and grooms were forced to strand in Thiruchengodu temple ghat road due to traffic jam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X