For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு தீங்கா? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பிராய்லர் கோழி சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்பட வாய்ப்பில்லை என்று தமிழக கால்நடைத்துறை அமைச்சர் இன்று சட்ட சபையில் தெரிவித்தார்.

கால்நடைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, பிராய்லர் கோழி சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கேடு விளையும் என்றும், சமூக வலைதளங்களிலும், பத்திரிகைகளிலும் அடிக்கடி செய்தி வெளியாவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

Broiler chicken won't affect humen health, says minister Balakrishna

இதற்கு பதிலளித்துப் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பேசியதாவது: பிராய்லர் கோழி சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. நாட்டுக்கோழி இனத்தைப் பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், 2 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தீவன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். திருவள்ளூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் புதிதாக 2 கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகள் உருவாக்கப்படும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன், சென்னையில் கால்நடை நிகழ்வியல் பிரிவு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து புள்ளிவிவரங்களையும் அவர் வெளியிட்டார். இதுவரை தமிழகத்தின் 19 மாவட்டங்களில் 21.38 லட்சம் மாடுகளுக்கும், 9.58 லட்சம் செம்மறியாடுகளுக்கும் 11.41 லட்சம் வெள்ளாடுகளுக்கும் ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து கால்நடை வாகனங்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டே, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 25 மாவட்டங்களில் 97 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் 2 ஆயிரத்து 362 கறிக்கோழி பண்ணைகளும், 10 ஆயிரத்து 358 நாட்டுக்கோழி பண்ணைகளும் நிறுவப்பட்டுள்ளதாகவும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Broiler chicken won't affect humen health, says Tamilnadu minister Balakrishna in the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X