For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜியோவுக்கு போட்டி... ரூ.249-க்கு 300 ஜிபி.... களத்தில் இன்று முதல் பி.எஸ்.என்.எல்.!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ரிலையன்ஸின் ஜியோவுக்குப் போட்டியாக ரூ249-க்கு 300 ஜிபி வழங்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல். இன்று முதல் அறிமுகப்படுத்துகிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

300 ஜிபி

300 ஜிபி

தற்போது மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அளவுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகப்படுத்துகிறது.

ரூ1க்கும் குறைவு

ரூ1க்கும் குறைவு

இந்த திட்டத்தின்படி ஒரு ஜிபி இணைய சேவையை ரூ.1-க்கும் குறைவான செலவில் பயன்படுத்த முடியும். இணைய பயன்பாடு 300 ஜிபியை தாண்டினாலும், ஒரு ஜிபி இணையத்துக்கான கட்டணம் ரூ.1-க் கும் குறைவாகவே கணக்கிடப்பட்டு மொத்த பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

பிபி 249

பிபி 249

எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பிபி 249 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் புதிதாக பிராட்பேண்ட் இணைப்பை பெறுகிற வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி இணைய சேவை என்பது பிஎஸ்என்எல் இதுவரை அறிவித்த இணைய சேவைகளிலேயே மிகக் குறைவான கட்டணத்தைக் கொண்டதாகும்.

6 மாதங்களுக்கு

6 மாதங்களுக்கு

புதிதாக பிராட்பேண்ட் சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் முதல் 6 மாதங்கள் ரூ.249-க்கு சேவையை பெறலாம். அதற்கு பிறகு இந்த சேவைக்கு ரூ.499 செலுத்த வேண்டும். பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைய சேவையில் நிறைய வாடிக்கையாளர்களை சேர்க்கும் முயற்சியாக நாடு முழுவதும் இத்திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

English summary
Bharat Sanchar Nigam Limited (BSNL) has introduced new unlimited Best Broadband (BB) plan experience unlimited BB 249.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X