• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

பேன்ட் போட்டவுடன் டம்முடுமுன்னு அடிக்கிறதெல்லாம் வேலைக்கு ஆகாது.. புல்லட் மிரட்டல்

By Lakshmi Priya
|
  சிறைத்துறை பெண் எஸ்பிக்கு மிரட்டல் விடுத்த புல்லட்- வீடியோ

  தேனி: ஒரு ரவுடி, பல வழக்குகளை சுமந்து வரும் குற்றவாளி போலீ்ஸ் அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து மிரட்டல் விடுத்து வருவது மக்களை அதிர வைத்துள்ளது. அந்த ரவுடி புல்லட் நாகராஜின் ஆடியோ பேச்சு முழு விவரம், வாசகர்களுக்காக:

  பெரியகுளம் தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு மிரட்டல் விடுத்து பேசிய பேச்சு... மதனகலா மேடத்துக்கு எனது அருமையான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதாவது விஜயசாந்தினு நெனப்பா.

  Bullet Nagarajs full audio speech

  4 பேர் இருக்கும் போது தடமுடனு அடிக்கறது. போலீஸ் ஸ்டேஷனுக்கென்று ஒரு லிமிட் இருக்கு. பர்ஸ்ட் அத உணரனும். பொம்பளைங்க பட்டாணி கடையில் என்ன செய்றாங்க. ஏஆர்ல என்ன செய்றாங்க. இந்த ஸ்டேஷன்ல என்ன செய்றாங்கன்னுட்டு எடுத்தவுடன் பேண்ட போட்டவுடன் டம்டும்முனு அடிக்கறதெல்லாம் வேலைக்கு ஆகாது.

  லேடீஸாக இருக்கோம். டேலன்டாக இருக்கோம்னு சொல்றீங்கல்ல. நைட் சிங்கிளாக ரைடுக்கு வர வேண்டியதுதானே. 10 பேர வச்சிகிட்டு போலீஸ் அடிக்கறது பெரிசு கிடையாது. ஒரு குழந்தையை கூட அடிக்கக் கூடாது, பெத்த புள்ளைய கூட அடிக்கக் கூடாதுனு சட்டமே இருக்கு. எதிர்க்க நின்னுகிட்டு உங்கள கேமராவுல போட்டோ எடுத்து அனுப்பியிருக்காங்களே. அதில் நீங்கள் ஏமாந்துட்டீங்களே. இப்ப நான் அத பிளாஷ் செய்யட்டா.

  உங்கள் பாஸ்போர்ட் இப்ப என் கைல இருக்கு. நல்லா கேட்டுகிட்டீங்களா. இனிமே இது மாதிரி செய்யாதீங்க. பெண்களை நான் வந்து புனிதமா மதிக்கிறேன். சினிமா படம் பாத்தாப்பல, ஒரு வாயாடி சேமங்குளத்துல இருந்துச்சி, அத இப்பதான் டிரான்ஸ்பர் பண்ணி கொடுத்தேன். ஒவ்வொரு ஆளையும் தூக்கி விட்டுக் கிட்டே இருக்க முடியாது.

  இது நிரந்தர பணிநீக்கத்துக்கு வாய்ப்பு வந்துடும். நல்லா கேட்டுகிட்டீங்களா. இன்னொரு டிரிப் என் மண்ணில் உள்ள பெரியகுளத்துக்கு காரகல கை தொட்டாலோ டைரக்டா நான் வந்து ஆஜராகி நாகராஜின் கோர்ட்டு வந்து கன்விக்ஷன் (தண்டனை) உண்டு. ஆஃப்ட்ரால் ஒரு இன்ஸ்பெக்டர். நல்லா கேட்டுகிட்டீங்களா. நான் அப்படி கிடையாது. ஜஸ்டிஸ் புரிதா.

  இதுதான் நாகராஜோட ஸ்டைல். வீட்டுக்கு வந்து பாக்கலாம். இன்ன வரைக்கும் உன் மூஞ்சிய நான் பார்த்தது இல்லை. பாத்தா பயங்கரமான வேட்டையாடுவேன். நான் என்பீல்டு கிடையாது. ஐயாம் ஏ கேலிபர் புல்லட். ஆளானப்பட்ட எஸ்பி லேயிருந்து டிஎஸ்பிலேயிருந்து பவுஸ் வாங்கினத்து நாகராஜ் ஒரே ஆளுதான். தங்க நகை வாங்கறது. வாயை தொறந்தால் எல்லா பயலும் ரிமாண்ட் ஆகிடுவீங்க.

  நீங்கள் என்னென்ன தப்பு பன்னியிருக்கீங்கன்னு அதையும் தெரிஞ்சு போச்சு எனக்கு. நல்லா கேட்டீங்களா. நான் சொல்ல விரும்பல. அதாவது உங்களுக்கு ஒரு வாய்ப்பு தரேன். ஆபர்சூனிட்டினு சொல்வோம் அது பேரு. பெண்களா இருக்கறதால ஒரு வாய்ப்பு தரேன். 2-ஆவது வாய்ப்பு தரதுக்கு நான் ஒன்னும் கடவுள் கிடையாது.

  ஸ்டைட்டா நான் இறங்கிடுவேன். பாவம் அனாதையாக வந்து ஈ மிச்சிகிட்டு கெடகற நிலைக்கு ஆளாகிடாதீங்க. ஜஸ்டின் பிரபாகரன்ல இருந்து ஆளானப்பட்ட கொம்பன பூரா பாத்துட்டேன் நான். ஆறிலும் சாவு நூறிலும் சாவு, நேருக்கு நேரா நெஞ்சுல குத்தனும். 4 நாள் ஆடிபுட்டு அதுகப்பறம் அது சுத்தப்படாது.

  சுத்தமான வீரன் என்னை மாதிரி மோதனும். அதான் எனக்கு பிடிக்கும் . என் வீட்டுக்கு வரலாம். வீட்டை சுத்தி 100 போலீஸ் போடுங்க. என்னை பிடிச்சி தூக்கிட்டீங்கன்னா நான் அதே இடத்துல இறந்துடறேன். அடுத்த நிமிஷம் உங்களுக்கு எங்க தொட்டா வலிக்கும் என்பது எனக்கு தெரியும். யார் எந்த சட்டத்துல உங்களுக்கு அடிக்கறதுக்கு அதிகாரம் கொடுத்தா.

  சட்டவிரோதமா லாட்ஜுகள்ல வச்சிருக்கீங்க கைதிகள் பூராம். ஒரு மாசம் கழித்து அனுப்பறீங்க. குடிச்சிட்டு வண்டி ஓடுறது அது இதுன்னு ஏகப்பட்ட கேஸ் போடறீங்க. எல்லாம் எனக்கு தெரியும். இனிமே என் பசங்ககிட்ட வால் ஆட்டினா நான் எடுக்கற ஆக்ஷன் வந்து பயங்கரமா இருக்கும். எப்படி நான் சொல்ல விரும்பல. ஏன் தெரியுமா. அந்த மாதிரி தப்பு பண்ணிருக்கீங்க. ஆதாரம் இல்லாமல் பேசுவதற்கு இந்த புல்லட் நாகராஜன் சாதாரண ஆள் கிடையாது.

  நான் இன்னும் என்ன இடத்துல பொசிஷன்ல உட்கார்ந்து இருக்கேன்னே தெரியலையே உங்க போலீஸுக்கு. பிரஸ்ஸுல இருக்கான் அட்வகேட்டா இருக்கான்றது மட்டும்தான் தெரியும். என் ஊரை கண்டுபிடியுங்களேன். எவ்வளோ படிப்பு படிச்சிருக்கேன் தெரியுமா, பார்மஸி முடிச்சிருக்கேன், ஸ்டாஃப் நர்சிங் முடிச்சிருக்கேன். அது வந்து அந்த காலத்து வெள்ளைக்காரங்க என்ன சொல்லியிருக்காங்க. லேடீஸுக்கு நிர்வாகத் திறமை பத்தானு சொல்லிருக்காங்க. அது சரியாதான் இருக்கு. சினிமா படம் கிடையாது. நீங்கள் ஒன்னும் விஜயசாந்தி கிடையாது தெரியுமா. சினிமாலாம் பாக்காதீங்க இனிமே. டூட்டிய மட்டும் பாருங்க. டேக் டைவர்ஷன்ட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிடுங்க. வச்சிட்டா.. நோ மென்ஷன் சொல்லி முடிக்கிறேன். நீங்கள் சாரி , தேங்க்ஸ் சொல்லக் கூடாது.. அதனால் நோ மென்ஷன் டேக் கேர் என்று சொல்லவிட்டு புல்லட் நாகராஜ் இணைப்பை துண்டித்துவிட்டார்.

  நன்றி: சன் நியூஸ்

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Hear the full audio speech of police threatening rowdy sheeter Bullet Nagaraj.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more