For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புல்லிபாய்.. கோவை விமான நிலையத்தில் உலக புகழ்பெற்ற காங்கேயன் காளைக்கு சிலை

காங்கேயன் காளைக்கு சிலைக்கு விமான நிலையத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

கோவை: நாட்டு மாடு இனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை விமானநிலையத்தில் உலகப் புகழ்பெற்ற BULLYBOY எனப்படும் காங்கேயம் காளையின் சிலை வைக்கப்பட்டு உள்ளது.

சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் புல்லி பாய் மற்றும் பெரியவன் என்று அழைக்கப்பட்ட காங்கேயம் காளைகள் இருந்தன. அதில் புல்லி பாய் என்ற காளை வயது மூப்பின் காரணமாகக் கடந்த பிப்ரவரி மாதம் இறந்தது.

Bullyboy statue is now at Kovai Airport

அதன் சிறப்பை நினைவுபடுத்தும் வகையிலும், காங்கேயம் மாடுகளை பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்காகவும் அந்த மாட்டின் சிலை கோவை விமான நிலையத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது காளையின் சிலை வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இச்சிலையுடன் காங்கேயம் மாடுகளைப் பற்றிய குறிப்புகள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும் வைக்குமாறு சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர், கார்த்திகேய சிவ சேனாதிபதியிடம் விமான நிலைய அலுவலர்களுக்கு வேண்டுகோள் வைத்து உள்ளார். இந்த சிலையை தொடர்ந்து தற்போது விமான நிலையத்தின் முன்பாக யானையின் சிலையும் வைக்கப்பட்டு வருகிறது.

English summary
Bullyboy statue is now at Kovai Airport
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X