For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுமக்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றே கட்டணக்குறைப்பு: எடப்பாடியார் விளக்கம்

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றே கட்டணக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக முதல்வர் எடப்பாடியார் விளக்கம் அளித்து உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

    மதுரை: பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றே பேருந்து கட்டணங்களை குறைத்து மீண்டும் உத்தரவிடப்பட்டு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழக அரசு பேருந்துகளில் கடந்த 20ம் தேதி முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. திடீரென உயர்த்தப்பட்ட அதிக கட்டண உயர்வால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.

     Bus Fares are reduced due to people demand Says TN chief minister

    இதனால் கட்டண உயர்வைக் கண்டித்து பொதுமக்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இந்நிலையில், இன்று தமிழக அரசு பேருந்து கட்டணங்களை குறைத்து உத்தரவிட்டு உள்ளது.

    இருப்பினும் இந்த புதிய கட்டணக்குறைப்பு பைசா அளவிலேயே இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். இந்நிலையில், மதுரையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து விளக்கம் அளித்து உள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேருந்து கட்டண உயர்வு நடவடிக்கை வேறு வழியில்லாத காரணத்தினாலே மேற்கொள்ளப்பட்டது. நாளென்றுக்கு 12 கோடி இழப்பு ஏற்பட்டு வந்த நிலையில், அதை தவிர்க்கவே அரசு இந்த முடிவை செயல்படுத்தியது.

    தற்போது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததாலே, இந்த கட்டணக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.

    English summary
    Bus Fares are reduced due to people demand Says TN CM Edappadi Palaniswamy. Earlier today TN Government announed that the Bus Fare Hike Reduced and it will be applicable from Tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X