For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பிறகு பஸ் இயக்கம்.. போலீஸ் பாதுகாப்புடன் நெல்லைக்கு அரசு பஸ்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனினும் போலீஸ் பாதுகாப்புடனே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்பினை தொடர்ந்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்த காரணத்தினால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையை கருத்திகொண்டு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

Bus service started after 3 days in Thoothukudi.

இந்நிலையில், 3 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் பேருந்து சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு முதல்கட்ட பேருந்து சேவை தொடங்கப்பட்டது. ஆனால் காவல்துறையினரின் முழு பாதுகாப்புடனே இயக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னர் படிப்படியாக பேருந்து சேவை தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இனிடையே, கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புறநகர் பகுதிகளான முத்தையாபுரம், ஸ்பிக் நகர், ஆத்தூர், வாகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் 144 தடை உத்தரவு வரும் மே 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Bus service started after 3 days in Thoothukudi. However, the first bus service from Thoothukudi to Thirunelveli has been started with police protection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X