For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காசிமேட்டில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு: பேருந்து மீது கல்வீச்சு- பதற்றம்

சென்னை காசிமேட்டில் மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தின் போது பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாநகர பேருந்தின் கண்ணாடி உடைந்தது. மீனவர்கள் மறியலால் சாலையில் போக்குவரத்து நிறுத்தப

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மீனவர்கள் சாலை மறியல், போலீஸ் தடியடி-வீடியோ

    சென்னை: காசிமேடு மீனவர்கள் போராட்டம் காரணமாக அங்கு ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலின் பேருந்து மீது கல்வீசி தாக்கியதால் இரண்டு பேருந்துகளின் கண்ணாடி உடைந்தது. காசிமேடு பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது.

    Buses damaged in stone-throwing in Chennai Kasimedu

    தடை செய்யப்பட்ட சீன எஞ்சின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக புகார் கூறி காசி மேடு மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் காசிமேடு பகுதியே போர்க்களமானது.

    Buses damaged in stone-throwing in Chennai Kasimedu

    அதிவேக எஞ்சினைக் கொண்டு விசைப்படகுகளில் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கிறது என்பது காசிமேடு மீனவர்களின் புகார். அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள்தான் இந்த படகுகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி காசி மேட்டில் மீனவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Buses damaged in stone-throwing in Chennai Kasimedu

    சாலைமறியலின் போது பலர் கருங்கற்களை வீசி எறிந்தனர். இதில் சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் மீனவர்கள் பலர் காயமடைந்தனர்.

    Buses damaged in stone-throwing in Chennai Kasimedu

    எனினும் கூட்டம் கலையாமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று மீனவர்கள் கூறி வருகின்றனர்.

    Buses damaged in stone-throwing in Chennai Kasimedu

    சீனா எஞ்சின்களை விசைப்படகுகளில் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர் மதுசூதனன் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Buses damaged in stone-throwing in Chennai Kasimedu

    திடீர் சாலைமறியல் காரணமாக அலுவலகத்திற்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    அமைச்சர் ஜெயக்குமார் வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மீனவர்கள் வாதம் செய்வதால் பதற்றம் உருவாகியுள்ளது.

    English summary
    State govermnent buses were damaged in stone throwing incidents allegedly by Fishermen at Kasimedu in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X