For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் மீண்டும் பண நீக்க நடவடிக்கை வருகிறதா? பூடான் ரிசர்வ் வங்கி பரபரப்பு அறிவிப்பு

இந்திய ரூபாயை வைத்திருக்காதீர்கள் பூடான் மத்திய வங்கி அந்நாட்டு மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவில் பணபதிப்பிழப்பு நடவடிக்கையா ? பூடான் வங்கி அறிவிப்பால் சர்ச்சை- வீடியோ

    சென்னை: இந்திய ரூபாயை கையில் வைத்திருக்காதீர்கள். சேமிக்காதீர்கள் என்று பூடான் ரிசர்வ் வங்கி அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் அண்டை நாடுகளானா பூடான், நேபாளம் நாடுகளிலிருந்து பலரும் இந்தியாவுக்கு வந்து வேலை செய்கிறார்கள். அதனால், அவர்கள் இந்தியாவின் ரூபாயை பயன்படுத்தி வந்தனர். இதனை பூடான் நேபாளம் நாட்டு அரசுகளும் அனுமதித்திருந்தது.

    இந்தச் சூழலில், கள்ள நோட்டு, கருப்புப் பணம் ஒழிப்பதற்காக பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

    இப்போதுதான் பரவாயில்லை

    இப்போதுதான் பரவாயில்லை

    இதனால், இந்தியா மட்டுமல்ல, இந்திய ரூபாயைப் பயன்படுத்தியநேபாளம், பூடான் ஆகிய நாட்டு மக்களும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    இந்திய பிரதமர் மோடியின் இந்த திடீர் உத்தரவால், சிரமத்துக்குள்ளான பூடான், நேபாளம் நாட்டு மக்கள் இந்திய பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றினார்கள். இந்த பிரச்சனை கிட்டத்தட்ட ஒருஆண்டுக்குப் பின் தற்போதுதான் நிலைமை சீரடைந்துள்ளது.

    பரபரப்பு அறிக்கை

    பரபரப்பு அறிக்கை

    இந்நிலையில், இந்திய ரூபாயைப் பயன்படுத்துவது பற்றி, பூடானின் ரிசர்வ் வங்கியான ராயல் மானிட்டர் அதாரிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பூடான் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:

    "இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் ரொக்கமாக வைத்திருக்கும் பூடான் நாட்டு மக்கள் முடிந்தவரை அதை வங்கியில் செலுத்தி தேவைக்கு ஏற்றார் போல் எடுத்து பயன்படுத்துகிறார்கள். இந்திய ரூபாயை ரொக்கமாக கையில் வைத்து செலவு செய்வதையும், சேமித்து வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளது.

    எப்போது வேண்டுமானாலும்

    எப்போது வேண்டுமானாலும்

    மேலும், அந்த அறிக்கையில், "இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது போல பணமதிப்பு நீக்கம் எப்போது எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்பட்டு செல்லாமல் போகலாம். ஒருவேளை அது மாதிரி நடைபெற்றால், மக்கள் கையில் வைத்திருக்கும் இந்திய ரூபாய்க்கு பூடான் ரிசர்வ் வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது. மேலும், இந்தியாவின் 500 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டு அதிகம் புழங்குவதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவின் 500 ரூபாய் நோட்டுகளை ரூ.25 ஆயிரத்துக்கு மேல் அதிகமாக வெளியே எடுத்துச் செலவு செய்ய வேண்டாம்." என்று தெரிவித்துள்ளது.

    அதிகாரப்பூர்வம் இல்லை

    அதிகாரப்பூர்வம் இல்லை

    பூடான் ரிசர்வ் வங்கியி அறிவிப்பு குறித்து, பூடான் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்திய ரிசர்வ் வங்கி ஏதேனும் நடவடிக்கை எடுக்க போகிறதா? என்பது எதுவும் தெரியாது. ஆனால், பூடான் ரிசர்வ் வங்கி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ரூபாயை கவனமாக வைத்துக்கொள்ளவும் சேமிக்கவும் வேண்டாம் அறிவித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்."என்றார்.

    English summary
    Butan Reserv Bank announced its people, Do not have Indian rupees. Incase whenever announce again demonitisation then Butan reserve bank not responsible.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X