For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடைத்தேர்தல்: ஓட்டுக்கு ரூ5000 டோக்கன்... கள்ள ஒட்டு போட்ட அதிமுகவினர் கைது

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, புதுச்சேரியின் நெல்லித்தோப்பு உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ள

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை முதலே இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று திமுக களமிறங்கியுள்ளது. வெற்றியை தக்கவைக்க அதிமுக முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

By election: AIADMK men arrested for bid to bribe voters

தஞ்சாவூரில் சரபோஜி கல்லூரி வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டுப்போட முயன்ற 9 பேர் அதிமுகவினர் பிடிப்பட்டனர். கள்ள ஓட்டு போட வந்த அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்து திமுகவினர் போலீசிடம் ஒப்படைத்தனர்.

பணப்பட்டுவாடா

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தென்பழஞ்சியில் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததாக எழுந்த புகரின் பேரில் அதிமுகவினர் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதி ஐராவதநல்லூரில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர்.

ரூ. 5000 டோக்கன்

புதுச்சேரி நெல்லித்தோப்பில் வாக்காளர்களுக்கு ரூ.5000 கூப்பன் கொடுத்த அதிமுக பிரமுகர் வேதகிரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேல்முருகன் நகரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அதிமுகவிற்கு வாக்கு கேட்டு டோக்கன் கொடுத்த வேதகிரி சிக்கினார். மேலும் ஒருவர் தப்பி ஓடினார்.

English summary
Local functionaries of AIADMK in Thiruparankundram constituency were today arrested for allegedly trying to distribute money to voters, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X