For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. உள்ளாட்சி தேர்தல் சீக்கிரம் வருமா..!

தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Why Congress is loss Nanguneri byelection

    சென்னை: அப்பாடா.. எப்படியோ அதிமுக நினைச்சதை சாதித்து வருகிறது.. அப்படியே சூட்டோடு சூடாக உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

    போன 2016, நவம்பர் மாசமே நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து கோர்ட்டுக்கு போய்விட்டது எதிர்தரப்பு... ஆனால், பல்வேறு காரணங்களை சொல்லி சொல்லியே காலத்தை நீட்டித்து வந்தும்விட்டது தமிழக அரசு!

    உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பது அதிமுக அரசுக்கு சாதகம் என்றால், நடத்தாமல் தள்ளி போட்டுக் கொண்டு வரும் ஆளும் தரப்பின் செயல் திமுகவுக்கு சாதகமாகிவிட்டது. போகிற இடமெல்லாம் "உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருக்காங்களே ஏன் தெரியுமா? தோற்றுவிடுவோம் என்ற பயம்தான் காரணம்" என்ற ஸ்டாலினின் பிரச்சாரம் திமுகவின் பலத்தை கூட்டியது.

    விக்கிரவாண்டி நாங்குநேரியில் நாம் தமிழர் கட்சியின் பரிதாப நிலை.. வீழ்ச்சிக்கு காரணம் என்னவிக்கிரவாண்டி நாங்குநேரியில் நாம் தமிழர் கட்சியின் பரிதாப நிலை.. வீழ்ச்சிக்கு காரணம் என்ன

    வெற்றி

    வெற்றி

    ஆனால், இந்த இடைத்தேர்தலின் வெற்றி - தோல்வியை வைத்துத்தான் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதா, வேண்டாமா என்ற முடிவுக்கு அதிமுக வரும் என எதிர்பார்ப்பு உள்ளது. இப்போது இடைத் தேர்தலில் அதிமுக வெற்றியை நோக்கி நடை போட்டு வருகிறது. இது அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஆதங்கம்

    ஆதங்கம்

    குழாயில் தண்ணீர் வரலை என்றாலும் ஆளும் தரப்பு கவுன்சிலர் முதல் எம்எல்ஏ, எம்பி வரை முற்றுகையிட்டு கேள்வி கேட்ட மக்களின் ஆதங்கத்துக்கு முடிவு கட்ட அதிமுக தயார் ஆகிவிடும் என்றே தெரிகிறது. ஆம்.. இந்த இரு தொகுதியின் வெற்றியானது, உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தும் நோக்கத்தை அதிகப்படுத்தி உள்ளது.

    டிசம்பர் மாதம்

    டிசம்பர் மாதம்

    ஏற்கனவே, நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்த தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த இடைத்தேர்தலின் வெற்றி அதற்கு கூடுதல் நம்பிக்கையை தந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கூட்டணி ஒத்துழைப்பு இருந்தாலும் பாமகவின் உழைப்புதான் அதிகமானது. இதே ஒத்துழைப்பு வரும் உள்ளாட்சி தேர்தலுக்கும் அதிமுகவுக்கு கிடைக்கும் என்பதாலும், எடப்பாடி அரசுக்கு இந்த இடைத்தேர்தலின் வெற்றியானது இன்னொரு பிளஸ் ஆக அமைந்திருப்பதாலும், உள்ளாட்சித் தேர்தலை தமிழகம் விரைவில் சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    பாஜக ஆதரவு

    பாஜக ஆதரவு

    இரு தொகுதி இடைத் தேர்தல் சாதகமான முடிவைக் கொடுத்திருப்பதால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த பாஜகவும் கூட ஆதரவு கொடுக்கும் என்றே தெரிகிறது. எனவே அதிமுக, பாஜகவுக்கு ஆறுதலான முடிவாக இடைத் தேர்தல் முடிவு வந்திருப்பதால் விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றே தெரிகிறது.. காரணம் தற்போது அத்தனை அம்சங்களும் அதிமுகவுக்கு சாதகமாகவே உள்ளன!

    English summary
    vikkriavandi and nanguneri by election result 2019: the aiadmk is expected to hold local body elections soon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X