For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேபிள் டிவி ஒளிபரப்பை கட் பண்ணாமலேயே போராட்டம்- கேபிள் டிவி ஆபரேட்டர்கள்

By Mathi
Google Oneindia Tamil News

Cable tv operators withdraw "broadcast stop" protest
சென்னை: ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்திருந்த போராட்டத்தை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்தாமலேயே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக கேபிள் டிவி ஆப்ரட்டர்கள் பொது நல சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

எங்கள் சங்கம் சார்பில் அக்டோபர் 4 கேபிள் டிவி ஒளிபரப்பு ரத்து மற்றும் இதர போராட்டங்களும் அறிவித்து இருந்தோம்.

ஆனால் அரசு தரப்பு செய்தி ஒளிபரப்புகளை தடை செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டது. இதனால் இதர போராட்டங்கள் நடைபெறும். அதே நேரத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு வழக்கம் போல ஒளிபரப்பாகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கேபிள் டிவி ஒளிபரப்பு வழக்கம்போல நடைபெற்றது. அதே நேரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

English summary
The cable tv operators withdraw their the cable tv broadcast stop protest in support of Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X