For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தின் பல இடங்களிலும் கேபிள் டிவி ஒளிபரப்பு 'கட்'.. போலீஸ் முன்னெச்சரிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் மாநிலம் முழுக்க பரவியுள்ளதால், டிவி சேனல்கள் ஒளிபரப்பை இருட்டடிப்பு செய்ய கேபிள்களை கட் செய்ய ரகசிய உத்தரவு போயுள்ளது.

அறவழி போராட்டத்தை தடுக்க நினைத்து வலுக்கட்டாயமாக தடியடி நடத்திய போலீசாரின் செயல் இப்போது பிரச்சினையை பெரிதாக்கிவிட்டது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தமிழகமெங்கும் மோதல் உருவாகியுள்ளது. இரு தரப்பினரும் கல்வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Cable tv's got disconnected at many places in Tamilnadu

மெரினா போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சென்னையின் பல பகுதிகளில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்றுமாலை வரை கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்தி வைக்க அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை, தஞ்சை என பல மாவட்ட மக்களும் கேபிள் டிவி இன்றி டிவி பார்க்க சிரமப்படுகிறார்கள்.

இந்த இணையதள புரட்சி காலத்திலும் இது எந்த அளவுக்கு போலீசாருக்கு பலன் கொடுக்கும் என்பது புரியவில்லை.

English summary
Cable tv's got disconnected at many places in Tamilnadu to prevent violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X