For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு அனுமதியின்றி காட்டை விழுங்கிய ஜக்கி.. சிஏஜி அறிக்கையில் திடுக் தகவல்!

ஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு ஒத்துழைப்போடு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஈஷா யோகா மையம் கபளிகரம் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசு அனுமதியின்றி காட்டை விழுங்கி கட்டிடம் கட்டிய ஜக்கி - சிஏஜி அறிக்கை- வீடியோ

    சென்னை: ஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஈஷா யோகா மையம் கபளிகரம் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

    கோவை மாவட்ட எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவால் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த யோகா மையம் பல ஏக்கர் பரப்பளவில் அரசின் அனுமதி பெறாமல் வனத்தை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக சிஏஜி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த திங்கள் கிழமை தமிழக சட்டசபையில் சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    யானைகள் வசிப்பிடம்

    யானைகள் வசிப்பிடம்

    2005-2008 முதல் எச்ஏசிஏ எனும் மலை பகுதியை பாதுகாக்கும் குழுவின் அனுமதியில்லாமல் யானைகள் வசிப்பிடம் என பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஈஷா நிறுவனம் கட்டுமானத்தை நடத்தியதாக சிஏஜி குற்றஞ்சாட்டியுள்ளது.

    கிராம பஞ்சாயத்து அனுமதி

    கிராம பஞ்சாயத்து அனுமதி

    மேலும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஈஷா அறக்கட்டளை பூலுவாப்பட்டி கிராமத்தில் 32,856 சதுர அடி பரப்பளவில் பல கட்டடங்களை கட்ட கிராமப்புற பஞ்சாயத்து அனுமதி பெற்றுள்ளது. இது 1994 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடையில்லா சான்று பெறவில்லை

    தடையில்லா சான்று பெறவில்லை

    ஆனால் மலை பாதுகாப்பு குழுவிடமிருந்து இதுதொர்பாக தடையில்லா சான்றிதழ் பெறாமலேயே இந்த கட்டடங்களை கட்டியுள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒப்புதல் தேவை

    ஒப்புதல் தேவை

    மலை பகுதிகளில் உள்ள வளர்ச்சி சுற்றுச்சூழல் ரீதியாக ஏற்கத்தக்கது என எச்ஏசிஏ தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் அரசாங்க உத்தரவின் படி, கிராமத்தில் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு எச்ஏசிஏ ஒப்புதல் தேவை.

    ஆலோசிக்காமல் கட்டுமானம்

    ஆலோசிக்காமல் கட்டுமானம்

    அக்டோபர் 2011 இல், ஒரு தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு யோகா மையம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2012 ல், வனத்துறை அதிகாரி ஒருவர் யோகா மையத்தை பார்வையிட்டபோது, 2005-2008 முதல் 11,873 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு எச்ஏசிஏ ஆலோசிக்காமல் வெறும் பஞ்சாயத்து அனுமதி மட்டுமே பெற்றிருப்பதை கண்டறிந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செவி கொடுக்காத ஈஷா

    செவி கொடுக்காத ஈஷா

    இது குறித்து 2012 பிப்ரவரி மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் விளக்கம் கேட்டும் ஈஷா தொடர்ந்து கட்டடம் கட்டி வந்திருக்கிறது. அதை தொடர்ந்து அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈஷா மையம் அனுப்பிய தடையில்லா சான்றிதழ் திருப்பி அனுப்பிய பின்னர் கட்டிடம் கட்டுவதை தடை செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தவறிய வனத்துறை

    தவறிய வனத்துறை

    2012 ஆம் ஆண்டு கட்டடம் கட்டும்போது அளிக்கப்பட்ட அறிக்கையின் பெயரில் நடவடிக்கை எடுக்க வனத்துறை தவறி இருக்கிறது என்றும் சிஏஜி சட்டசபையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    CAG reports that Isha foundation builds so many buildings in the Coimbatore forest area without Tamil Nadu forest department approval.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X