For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசே கட்டணத்தை நிர்ணயிக்க கால்டாக்சி ஓட்டுநர்கள் பேரணி... சென்னையில் சுமார் 10,000 கால்டாக்சி ஓடவில்

Google Oneindia Tamil News

சென்னை: கால் டாக்சிகளுக்கு அரசே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கால் டாக்சி ஓட்டுநர்கள் சென்னையில் பேரணி நடத்தினர். இதனால், சுமார் 10,000 கால்டாக்சிகள் சென்னையில் ஓடவில்லையாம்.

கால் டாக்சிகளுக்கு அரசே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என கால்டாக்கி ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் கோட்டையை நோக்கி பேரணியாக சென்றனர்.

Call taxi drievers rally nearly 10,000 call taxies has not run!

தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள நிலையற்ற கட்டண விகிதங்கள், மற்றும் பல்வேறு நிபந்தனைகளால் பாதிப்பு ஏற்படுகிறது. ஓட்டுநர்களுக்கு விதித்துள்ள நிபந்தனைகளை நிறுவனங்கள் தளர்த்த வேண்டும். முறையான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். 5 பேர் அமரும் வாகனங்களுக்கு முதல் 4 கி.மீ.க்கு ரூ.150, 7 பேர் அமரும் வாகனங்களுக்கு முதல் 4 கி.மீ.க்கு ரூ.200 கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த பேரணியானது சிந்தாதரிப்பேட்டையில் நிறைவடைந்தது. பின்னர் இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவில் கால்டாக்சி ஓட்டுநர்கள் மனு அளித்தனர். கால் டாக்சி ஓட்டுநர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் சுமார் 10,000 கால் டாக்சிகள் ஓடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Call Taxi drivers have railed in Chenni to urge the government to determine fare.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X